குட் நியூஸ்..!!வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு.!

Gold price
Gold Price
Updated on

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் சரிவை சந்தித்த நிலையில், வாரக் கடைசியில் விலை உயர்ந்தது. பொருளாதார நிபுணர்கள் பலர் தங்கத்தின் விலை உயரும் என கணித்திருந்த நிலையில், அதன் விலை குறைந்து வருவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

இருப்பினும் தங்கத்தின் ஏற்ற இறக்கம் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். நேற்று (ஜூன் 28) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,960-க்கும், ஒரு கிராம் ரூ.13,370-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,45,000-க்கு விற்பனையானது.ப்ப்

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 29) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 29-ல் 1 சவரன் தங்கம் ரூ.71,440-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 29 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

Gold Price
Gold Price
இதையும் படியுங்கள்:
மகளிருக்கு இனி ராஜ வாழ்க்கை.. தமிழகத்தின் புதிய மாஸ் அப்டேட் இதுதான்!
Gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 28: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960

ஜூன் 27: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960

ஜூன் 26: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

ஜூன் 25: 1 கிராம் - ரூ.13,140 1 சவரன் ரூ.1,05,120

ஜூன் 24: 1 கிராம் - ரூ.13,350 1 சவரன் ரூ.1,06,800

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 28: 1 கிராம் - ரூ.245

ஜூன் 27: 1 கிராம் - ரூ.245

ஜூன் 26: 1 கிராம் - ரூ.235

ஜூன் 25: 1 கிராம் - ரூ.230

ஜூன் 24: 1 கிராம் - ரூ.240

தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் இப்போது முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் எனக் கணித்துள்ளனர். இருப்பினும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்கு பெரிதாக மற்றம் இருக்காது எனத் தெரிகிறது.

குறுகிய கால முதலீடுகளில் அதிக லாபத்தைக் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் நல்ல லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வாங்கும் மருந்து ஒரிஜினலா? இனி QR கோடை ஸ்கேன் செய்தால் போதும்..!!
Gold price
logo
Kalki Online
kalkionline.com