ரெயில் பயணத்தில் இனி இந்த தவறை செய்தால் கம்பி எண்ண நேரிடும்: ரெயில்வே எச்சரிக்கை..!

பயணிகளின் அமைதியான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக ரெயில்வே வாரியம் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.
ரெயில் பயணம்
ரெயில் பயணம்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்திய ரெயில்வே விதிகளின்படி, ரெயிலில் பயணிக்கும் (ரெயில் பயணம்) போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மொபைல் போனில் உரக்கப் பேசுவதோ, சத்தமாகப் பாட்டு கேட்பதோ அல்லது வீடியோக்கள் பார்ப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் அமைதியான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக ரெயில்வே வாரியம் இந்த கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரெயில்களை பயன்படுத்துகின்றனர். ரெயில்களை பொறுத்தவரையில், குடும்பமாக, நண்பர்களாக, தனிநபராக என பலரும் தங்களுக்கு ஏற்றவாறு பயணம் செய்து வருகின்றனர். ரெயில் பயணத்தின்போது கூச்சலிடுவது, அதீத சத்தமாக பேசுவது, செல்போனில் சத்தமாக பாடல்களை கேட்பது உள்ளிட்டவைகள் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மற்ற பயணிகள் முகம் சுழிக்கும் சம்பவங்களும், பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல்கள் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ வழங்கப்பட்டு வருகிறது. அதில், ரெயில்களில் பாடல்கள் கேட்கும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிக சத்தமாக பாடல்கள் கேட்க கூடாது. 'ஹெட்செட்' மூலம் கேட்க வேண்டும். செல்போனில் பேசும்போது மெதுவாக பேச வேண்டும். செல்போனில் அழைப்பு வருவதற்கான சத்தத்தை குறைந்த அளவில் வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரெயில் பயணத்தின்போது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ஸ்பீக்கர் மூலம் வீடியோக்களைப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 145(2), ஜென் விஸ்வாஸ் (திருத்தச் சட்டம்) சட்டம், 2026-ன் கீழ் திருத்தப்பட்டுள்ள விதிகளின்படி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் என்ற குற்றத்திற்காக அபராதமோ அல்லது சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.

அதாவது, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படலாம்.

ரெயில் பயணம்
ரெயில் பயணம்AI image

மேலும், சம்பந்தப்பட்ட பயணி ரெயிலில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், அவரது பயணச்சீட்டு அல்லது பயண அனுமதியும் ரத்து செய்யப்படலாம்.

ரெயில்வே ஊழியர் (TTE அல்லது RPF) இடையூறு விளைவிக்கும் செயலை நிறுத்துமாறு அறிவுறுத்திய பின்னரும், அந்தப் பயணி தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டால், அவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரெயில்களில் பயணிகள் யாரும் சத்தமாக பேசுவது, செல்போனில் பாட்டு கேட்பது அல்லது வீடியோ பார்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இரவு விளக்குகளைத் தவிர (Night lamps) மற்ற அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பயணிகள் கவனத்திற்கு..! இந்த விதிமுறைகள் தெரியாமல் ரெயிலில் பயணம் செய்தால் ‘அபராதம்’ கட்டணும்..!!
ரெயில் பயணம்

இரவு நேரத்தில் பயணிகள் குழுவாக அமர்ந்து சத்தமாகப் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரெயிலில் பாட்டு கேட்கும் போதோ அல்லது வீடியோ பார்க்கும் போதோ கண்டிப்பாக இயர்போன் (Earphones) பயன்படுத்த வேண்டும்.

ரெயில் பயணத்தின் போது உங்களுக்கு இது போன்ற ஏதேனும் பிரச்சனை ரெயிலில் ஏற்பட்டால், ரெயிலில் உள்ள டி.டி.இ (TTE) அல்லது ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவிக்கலாம். மேலும் 139 என்ற உதவி எண் மூலமாகவோ அல்லது Rail Madad செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!! ரெயிலில் லக்கேஜ் லிமிட் வந்தாச்சு..! மீறினால் அபராதம்...!
ரெயில் பயணம்

சக பயணிகளின் வசதியையும் உரிமைகளையும் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், ரெயில் பயணத்தை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ரெயில்வே வலியுறுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com