#BREAKING : தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 6 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமனம்!

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்! குடியரசுத் தலைவர் மாளிகை அதிரடி அறிவிப்பு!
ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்
Updated on: 

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார்..கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் தமிழக கவர்னர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.தற்போது தமிழக கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமனம்: 6 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை அறிவித்தது குடியரசுத் தலைவர் மாளிகை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய 6 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை திங்கள்கிழமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தற்போது கேரள மாநில ஆளுநராகப் பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் (Rajendra Vishwanath Arlekar) தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சிக்கிம் மாநில ஆளுநராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்தூர் (Om Prakash Mathur) கேரளா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் விவரம்:

  • தமிழ்நாடு: ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் (கேரள ஆளுநராக இருந்தவர்)

  • கேரளா: ஓம் பிரகாஷ் மாத்தூர் (சிக்கிம் ஆளுநராக இருந்தவர்)

  • ஒடிசா: விராஜ் மோகன் ராம் (Braj Mohan Ram)

  • கர்நாடகா: டாக்டர் சுதா யாதவ் (Dr Sudha Yadav)

  • உத்தரகாண்ட்: டாக்டர் தால் சிங் பிசென் (Dr Dhal Singh Bisen)

  • சிக்கிம்: துஷ்யந்த் கெளதம் (Dushyant Gautam)

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் நாளில் இருந்து இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி நியமனம்..!!
ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்
logo
Kalki Online
kalkionline.com