ரயிலில் இருந்து கைவிலங்குடன் தப்பிய நபர்! 28 வருடங்கள் கழித்து டெல்லி போலீசில் சிக்கியது எப்படி?

28 ஆண்டுகளாக காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவி தப்பிய 'டாக்டர் ஜட்கா'!: மத்தியப் பிரதேசத்தில் டெல்லி போலீஸாரின் அதிரடி கைது நடவடிக்கை!
28 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி கைது
28 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி கைது
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி கைது

மாநிலம் விட்டு மாநிலம் தப்பியோடிய ‘டாக்டர் ஜட்கா’வின் திடுக்கிடும் வாழ்க்கை..கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக வாழ்ந்த குற்றவாளி ஒருவரை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் பல மாநிலங்களில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். இந்த கைது, இந்திய காவல்துறையின் நீண்டகால தேடுதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

போலீஸ் அதிகாரி கொலை வழக்கில்,கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவி சட்டத்திலிருந்து தப்பித்து, மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து மருத்துவராக குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வந்த நபரை டெல்லி போலீசார் இறுதியாக கைது செய்துள்ளனர்.

அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:

கைது செய்யப்பட்டவர் ராஜிந்தர் பைராகி. வயது 53. இவர் தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையின்போது, ராஜேந்தர் சிங் யாதவ் மற்றும் "டாக்டர் ஜட்கா" என்ற போலிப் பெயர்களிலும் வாழ்ந்து வந்துள்ளார்.

1998-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஹரியானா மாநில காவல்துறையைச் சேர்ந்த ஜெய் பகவான் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார் இந்தராஜிந்தர் பைராகி. இதுமட்டுமல்லாமல், டெல்லி மற்றும் ஹரியானாவில் பதிவான பல கொலை முயற்சி வழக்குகளிலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

போலிஸ் இவரைப் பிடித்து, உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் சிறையில் அடைத்தது. ஒரு வழக்கு தொடர்பாக 1999-ஆம் ஆண்டு ஹரியானா நீதிமன்றத்துக்கு கைவிலங்குடன் ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, கன்னௌர் ரயில் நிலையத்தில் காவல்துறையினரிடமிருந்து இவர் தப்பிச் சென்றார். அதன் பின்னர் 28 ஆண்டுகள் அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது.

இறுதியில், வடக்கு டெல்லி காவல்துறையின் கிரைம் பிராஞ்ச், பிரிவு, தொழில்நுட்ப கண்காணிப்பு, உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் பல மாநிலங்களில் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளின் மூலம், மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள முங்காவ்லி பகுதியில் அவரை போலிஸ் கைது செய்தது.

அவரிடம் போலிசார் தீவிரமாக நடத்திய விசாரணையில், தப்பியோடிய பிறகு முதலில் மகாராஷ்டிராவில் தங்கி, ஒரு கேந்திரிய வித்யாலயாவில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியதாகவும், பின்னர் மத்தியப் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறி ரியல் எஸ்டேட் துறையில், வியாபாரம் செய்ததாகவும் தெரியவந்தது. அது மட்டுமின்றி, "டாக்டர் ஜட்கா" என்ற பெயரில் போலி டாக்டராக இவர் உள்ளூர் மக்களுக்கு மருத்துவம் பார்த்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைப்பதற்காக ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் போலியான விவரங்களின் அடிப்படையில் இவர் பெற்றிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.தற்போது அவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கடந்த 28 ஆண்டுகளில் வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜிந்தர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு மற்றும் சட்டபூர்வ காவலில் இருந்து தப்புதல் உள்ளிட்ட குறைந்தது 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காலம் கடந்தாலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்பதற்கு இந்த கைது எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
28 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி கைது
logo
Kalki Online
kalkionline.com