முக்கிய அறிவிப்பு: ஆகஸ்ட் 29-ல் தமிழ்நாடு முழுவதும் eKYC சிறப்பு முகாம்!

விடுபட்டவர்கள் ரேஷன் பொருட்களைத் தடையின்றி பெற உடனடியாக கைரேகை பதிவு செய்ய கடைசி வாய்ப்பு.
eKYC Ration Card
Ration Card
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் மூலம் குறைந்த விலையில் மாதந்தோறும் உணவுப் பெருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் சரியான பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய eKYC செய்வது கட்டாயமாகும். இதன்படி ரேஷன் கடையில் eKYC செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஏற்கனவே eKYC செய்யாமல் விடுபட்டவர்களுக்கு மற்றுமொரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC சரிபார்ப்பு சிறப்பு முகாம் வருகின்ற ஆகஸ்ட் 29-ம் தேதியன்று (சனிக்கிழமை) நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
2 நிமிடங்களில் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ்: முழுமையான வழிகாட்டி!
eKYC Ration Card

சிறப்பு முகாம் விவரங்கள்:

* முகாம் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 29 (சனிக்கிழமை)

* நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

* இடம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள்

சிறப்பு முகாமின் நோக்கம்:

ரேஷன் கார்டில் உள்ள போலியான பெயர்களைக் கண்டறிந்து அதனை நீக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு ரேஸன் பொருட்கள் சென்றடைவதை 100% உறுதி செய்யவும் கைரேகை சரிபார்ப்பு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
நெல் கொள்முதல் முதல் ரேஷன் கடை வரை: அனைத்து புகார்களுக்கும் உதவி எண்கள் அறிவிப்பு!
eKYC Ration Card

முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் இதுவரை 96.21% அளவுக்கு eKYC பணிகள் முடிவடைந்துள்ளன. இதுவரையிலும் ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வருகின்ற ஆகஸ்ட் 29-ம் தேதி ரேஷன் கடைக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

1. ரேஷன் கார்டு

2. ஆதார் அட்டை

ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்க்கவும், தகுதியான ரேஷன் பயனாளிகளை உறுதிப்படுத்தவும் மின்னணு பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர் POS (Point of Sale) இயந்திரத்தில் ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் கார்டு எண்ணை உள்ளிட்டு, குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அல்லது கருவிழிப் பதிவின் மூலம் சரிபார்ப்பை மேற்கொள்வார்.

இந்த eKYC சரிபார்ப்புக்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அரசால் வழங்கப்படும் இந்த சேவை முற்றிலும் இலவசம் தான்.

ரேஷன் கார்டு e-KYC
ரேஷன் கார்டு e-KYC

முக்கிய குறிப்புகள்:

* இயந்திரத்தில் கைரேகை சரியாக விழாத மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு கண் கருவிழி (Iris scanner) மூலம் சரிபார்ப்பு செய்யப்படும்.

* 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு eKYC முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* 5முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு eKYC சரிபார்க்க புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு விவரங்கள் தேவைப்படும்.

* ரேஷன் கார்டில் eKYC செய்ய குடும்பத் தலைவர் மட்டும் சென்றால் போதாது. கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக தங்கள் கைரேகை அல்லது கருவிழியைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இதுவரை eKYC செய்யாத ரேஷன் கார்டுதாரர்கள், தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்குதில் சிக்கல் ஏற்படலாம். அதோடு, உங்கள் ரேஷன் கார்டை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.

logo
Kalki Online
kalkionline.com