ரேஷன் அரிசி ஆட்டுக்கும், மாட்டுக்கும் தான்... செங்கோட்டையனின் சர்சையான பேச்சு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரேஷன் அரிசியின் தரம் மற்றும் பயன்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன்
செங்கோட்டையன்image credit-dailythanthi.com
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரேஷன் அரிசியின் தரம் மற்றும் பயன்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய பேச்சு பெரும் விவாதத்தையும் திமுக உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இக்கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரேஷன் அரிசியை மக்கள் ஆட்டுக்கும், கோழிக்கும் மட்டுமே பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டது அரசியல் அரங்கில் சர்ச்சையானது.

தமிழக சட்ட சபையில் இன்றைய நிகழ்வில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார். அதை அடுத்து திமுக எம்எல்ஏ எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேசும்போது, எங்களுடைய 5 ஆண்டுகளில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாப்பாக குடோன்களில் வைத்தோம்.

நெல்லை பாதுகாத்தோம். நெல்லை நனையாமல், முளைக்க விடாமல், வெள்ளை நிறத்தில் அரிசி கிடைக்க வழி செய்தோம் என்று கூறினார். இது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும் கோழிக்கும் தான் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர் என்பதே உண்மை என்றார்.

திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் வாங்கும் ரேஷன் அரிசியை பொதுமக்கள் உண்பதை விட, அனைவரும் ஆட்டுக்கும், கோழிக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் தான் தீவனம் ஆக்கிக் கொண்டிருந்தனர். சன்னரகத்தை தான் மக்கள் விரும்புகின்றனர். அதன் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். செங்கோட்டையன் பேச்சுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கே. என். நேரு கூட ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறார். சுகர் கம்மியாகும் என்று, அந்த மோட்டா அரிசி தான் சாப்பிடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பதிலளித்தார். அதற்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, ரேஷன் அரிசி ஆட்டுக்கும், மாட்டுக்கும் என செங்கோட்டையன் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

ரேஷன் அரிசியை ஆடு, மாடுகளுக்கு வைக்கவில்லை என்றும் பொதுமக்கள் அதை சாப்பிடுகிறார்கள் என்றும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிலர் இந்த அரிசியை விரும்பி உண்கிறார்கள் என்றும் திமுக எம்எல்ஏ கே.என். நேரு வாதிட்டார்.

ரேஷன் கடை
ரேஷன் அரிசி

ரேஷன் அரிசி சாப்பிட்டால் சுகர் குறையும் என்பதால், எல்லா மக்களும் அதை சாப்பிடுகிறார்கள். காலையில் எழுந்ததும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் சுகர் குறையும் என்று பேட்டி அளிக்கிறீர்களே, அப்படித்தான் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்கள் என்று கே.என். நேரு பதிலளித்தார்.

அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வேளாண் மானியக்கோரியின் போது ஆயிரக்கணக்கான நிலங்கள் இருப்பதாக கே.என். நேரு தெரிவித்தார். ஏழையாக இருப்பது போல ரேஷன் அரிசி சாப்பிடுகிறார் என்ற தகவல் இன்று தான் தெரிகிறது என்றவர், எங்கள் குடும்பம் சாப்பிட்ட ரேஷன் அரிசி பெரிதாக இருக்கும். பெரும்பாலான எம்எல்ஏக்கள் ரேஷன் அரிசி சாப்பிடுவது இல்லை என்றவர் ரேஷன் கடையில் அரிசி வழங்கும் திட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்..! இனி குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி கிடையாது..!!
செங்கோட்டையன்

இன்றைய நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ரேஷன் அரிசி சாப்பிடுவதில்லை.

நமது ஆட்சியில் சன்னரக அரிசியை மக்களுக்கு கொடுப்போம் என்று முதல்வர் கூறினார். அதற்காகத்தான் சன்ன ரகத்திற்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 90% மக்கள் யாரும் அரிசியை சாப்பிடுவதில்லை. இட்லி மாவுக்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்று அமைச்சர் ஆதார் அர்ஜுனா பதிலளித்தார்.

சன்ன ரக நெல்லை ரேஷன் அரிசியாகக் கொடுப்பது சாத்தியம் இல்லை. தாளடி பட்டத்தில் மட்டுமே சன்னரக நெல் உற்பத்தி இருக்கும். என்று கே.என். நேரு தெரிவித்தார். அத்துடன் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பேச்சுக்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:
முதலில் இடம் மாறியது யார்.? செங்கோட்டையன் vs ஓபிஎஸ்... அனல் பறக்கும் பேச்சு..!
செங்கோட்டையன்

ஏழைகள் வாங்கும் உணவை இழிவு படுத்தக் கூடாது என்று அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் விளக்கம் அளித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com