கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் இருந்து 9 உடல்கள் மீட்பு… தென்னாப்பிரிக்காவில் பரபரப்பு!

Gold mine
Gold mine
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்திலிருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக ஒரு பணியில் ஈடுபடுவது மிகப்பெரிய தவறு என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதுவும் அங்கீகரிக்கப்படாத தங்க சுரங்கத்தில் யார் அனுமதியும் இல்லாமல் தங்கம் எடுப்பது எவ்வளவு பெரிய குற்றம். அதுவும் வெளியே வரும்படி எச்சரித்தும் உள்ளே இருந்த மக்கள் வெளியே வராமல், உள்ளேயே பலியாகியிருக்கின்றனர். இதுகுறித்தான முழு செய்தியையும் பார்ப்போம்.

தென்னாப்பிரிக்காவில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில், எந்த அனுமதியும் இல்லாமல், பணியாளர்கள் யாருக்கும் தெரியாமல் அங்கு பணி செய்து வந்தனர். இது அறிந்த போலீஸார் கடந்த ஆண்டு இறுதியில், அனைவரும் உடனே வெளியே வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் பணிகளைத் தொடர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இதையும் படியுங்கள்:
இந்த 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்… அமெரிக்கா எச்சரிக்கை!
Gold mine

இதனால், போலீஸார் உள்ளே இருந்த பணியாளர்களுக்கு உணவு தண்ணீர் போன்றவற்றை வழங்குவதை நிறுத்தினர். இதனால் கண்டிப்பாக அவர்கள் வெளியே வந்தாக வேண்டும் என்று போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், உள்ளே இருந்தவர்கள் வெளியே வராமல் இருந்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் உள்ளேயே சிக்கி இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால், உள்ளே இருந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து அவர்களை வெளியே அழைத்து வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியிலும், உயிரோடு இருப்பவர்களை வெளியே கொண்டு வரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் சுமார் 9 பேரின் உடலை போலீஸார் மீட்டுள்ளனர். மீதமுள்ள உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தேங்காய் எப்படி உடைந்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் தெரியுமா?
Gold mine

அதேபோல், பணி செய்யும் நபர்களையும் வெளியே கொண்டு வர போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நான்கு நாட்களாக நடந்து வரும் இந்த மீட்பு பணியில் நேற்று மட்டும் 7 பேரும், இன்று இரண்டு பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தொடரும் நிலையில், இன்னும் பல சடலங்கள் மீட்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com