ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

Ukraine Russia War
Ukraine Russia War
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யா தரப்பில் சண்டையிட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுமே போரை நிறுத்த முன்வருவதாக தெரியவில்லை. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது. மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது.

தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா அவ்வபோது சில கிராமங்களையும் கைப்பற்றி வருகிறது. சமீபத்தில்கூட மேலும் இரண்டு கிராமங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த இரு கிராமங்களை கைப்பற்றுவதில் உக்ரைன்  வீரர்கள் சுமார் 350 பேர் பலியாகினர். மேலும் ரஷ்யா உக்ரைனில் இன்னும் 9 இடங்களில் சண்டை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் ரஷ்யா தரப்பில் சில இந்தியர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் சண்டையிட்டு வந்தனர். இவர்களை மீட்கும் எண்ணத்தில் பிரதமர் மோடி பதவியேற்றவுடனே ரஷ்ய அதிபரிடம் இதுகுறித்து பேசினார். உடனே அவர்கள் தரப்பில் சண்டையிடும் இந்தியர்களை ஒப்படைக்கும்படி கூறினார். ரஷ்யாவும் அதற்கு ஒப்புக்கொண்டது.

இதையும் படியுங்கள்:
News 5 - (22.10.2024) தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள்!
Ukraine Russia War

ஆனால், ரஷ்யா ஒப்புக்கொண்ட பிறகும் தாமதப்படுத்தியே வந்தது. இதனையடுத்து பிரதமர் தொடர்ந்து ரஷ்ய அதிபருக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனையடுத்து தற்போது 80 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 20 இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய பிரதமர் களமிறங்கி உள்ளார்.

இந்தியா இருநாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. அதாவது எந்த நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்காமல், ஒரு நாடு சொல்லும் செய்திகளை மற்றொரு நாட்டுக்கு சொல்லி வருகிறது. அதுவும் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே பரிமாறி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com