Safest Bank | இந்தியாவின் பாதுகாப்பான 3 வங்கிகள் இவைதான்.. RBI வெளியிட்ட லிஸ்ட்!

RBI
RBI
Published on

இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டது. மக்கள் ஈஸியாக வங்கிகளை பயன்படுத்திய காலம் சென்று அனைத்தையும் உள்ளங்கையில் என்று டிஜிட்டலுக்கு தாவி விட்டார்கள். என்னதான் வங்கிகள் பாதுகாப்பானதாக இருந்தாலும் நமக்கு சிறிய பயம் இருக்கும். ஏனென்றால் நாம் சிறுக சிறுக சேமித்த பணம், சம்பாதித்த பணம் என நடுத்தர மக்கள் பலரும் அரிசி டப்பாவில் பணம் சேர்த்ததை தொடர்ந்து வங்கிகளில் சேமிக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே ஏராளமான வங்கிகள் செயல்பட்டு வருகிறது. தனியார் வங்கி, அரசு வங்கி என பல வங்கிகளில் நாமும் கணக்கு வைத்திருப்போம்.

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கும் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வங்கிகள் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்களாகக் கருதப்படுவதால் அவை ஒருபோதும் திவாலாகாது என்று ரிசர்வ் கூறியுள்ளது. மேலும் இந்த வங்கிகளால் நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என்றும் ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.

அந்த 3 வங்கிகள் பேங்க் ஆஃப் இந்தியா ( SBI ), ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகும். பொதுவாகவே அரசு வங்கி தான் பாதுகாப்பானதாக நினைக்கும் மக்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாக தான் இருக்கும். ஏனென்றால் இந்த பட்டியலில் உள்ள 2 வங்கி தனியார் வங்கி ஆகும். இந்த மூன்று வங்கிகளும் மற்ற வங்கிகளை விட அதிக ரொக்க இருப்பை அல்லது மூலதனத்தை வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் கூறுகின்றன. இது 'Common Equity Tier 1' (CET 1) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அவசர கால நிதியாகும். நெருக்கடி காலங்களில் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். இதனால் இந்த வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது. மேலும், மக்களின் பணமும் பாதிக்கப்படாது. எனவே, இந்த வங்கிகளில் பணம் வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.

இந்த வங்கிகள் "Domestic Systemically Important Banks" (D-SIBs) என்று வங்கித்துறையில் அழைக்கப்படுகின்றன. அதாவது, இவை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் ஆகும். இந்த வங்கிகள் வீழ்ச்சி அடைந்தால் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமும் சரிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளின் செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், இந்த வங்கிகள் வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்காக சிறப்பு விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

எனவே, நீங்கள் இந்த மூன்று வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். இந்த வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதால், அவை எப்போதும் நிலைத்து நிற்கும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உடனே இதை செஞ்சு முடிங்க..! டிசம்பர் 31-க்குள் இதை செய்ய தவறினால் பான் கார்டு செயலிழக்கப்படும்..!
RBI

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com