

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினசரி மாற்றம் ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் தங்கத்தின் விலை யாரும் எதிராபாரா விதமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதே மிக முக்கிய காரணமாகும்.
தங்கத்தை ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற முடியும். சந்தையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான முதலீடு தான், இன்றைய பொருளாதார உலகில் உன்னிபபாக கவனிக்கப்பட்டு வருகிறது.
முதலீட்டு நோக்கத்தில் தங்கம் விலையை கவனித்து வந்தால், அதன் விலை உயர்வது நமக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்காது என்பதே உண்மை.
நேற்று (ஜூன் 10) தங்கம் விலை 1 சவரன் ரூ.3,200 குறைந்தது. வெள்ளி விலை 1 கிலோ ரூ.10,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,10,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,800-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,60,000-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 11) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,400 குறைந்து, ரூ.1,08,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.5,600 குறைந்துள்ளது.
வெள்ளியினன் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 10: 1 கிராம் - ரூ.13,800 1 சவரன் ரூ.1,10,400
ஜூன் 9: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600
ஜூன் 8: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560
ஜூன் 7: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600
ஜூன் 6: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 10: 1 கிராம் - ரூ.260
ஜூன் 9: 1 கிராம் - ரூ.270
ஜூன் 8: 1 கிராம் - ரூ.270
ஜூன் 7: 1 கிராம் - ரூ.270
ஜூன் 6: 1 கிராம் - ரூ.270
கடந்த ஆண்டு இதே ஜூன் 11-ல் தங்கம் விலை என்னவாக இருந்தது என்பது தெரிந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். 2025 ஜூன் 11-ல், 1 சவரன் தங்கம் ரூ.72,160-க்கு விற்பனையானது. நடப்பாண்டுடன் ஒப்பிட்டால் ஒரே வருடத்தில் ரூ.35,840 உயர்ந்துள்ளது. நீங்கள் கடந்த வருடமே தங்கத்தை வாங்கியிருந்தால், உங்களுக்கு இந்தத் தொகை தற்போது லாபமே.
அதேபோல் 2025 ஜூன் 11 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கு விற்பனையானது. ஆனால் இன்று ரூ. 260-க்கு விற்பனையாகிறது. இதற்கிடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.
கடந்த வருடமே தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியிருக்கலாமே என கவலைப்பட வேண்டாம். முதலீடாக நினைத்து இப்போது வாங்கினால் கூட, அது அடுத்த வருடத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.