

இன்று இந்திய அரசின் கீழ் இயங்கும் உலகின் மிகப்பெரிய ரெயில்வே வலைப்பின்னல்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிற இந்திய ரெயில்வே(Indian Railways), 173 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறு முயற்சியாகவே தொடங்கியது. இன்று நாள்தோறும் 25,000 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.
இந்நிலையில் இந்திய ரெயில்வேயில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. இந்திய ரெயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்வே வாரியத்தின் (RRB) மூலம் இளநிலை பொறியாளர் (Junior Engineer - JE), டிபோ மெட்டீரியல் சூப்பிரண்டு (DMS, வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் (CMA)உள்ளிட்ட, நாடு முழுவதும் மொத்தம் 3,993 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரெயில்வேயில் 362 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 13-ம்தேதிக்குள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு காலிப்பணியிட விவரங்கள் :
அமைப்பு : ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
நிரப்பப்படும் பதவிகள்:
இளநிலை பொறியாளர் (Junior Engineer -JE)
டிபோ மெட்டீரியல் சூப்பிரண்டு (Depot Material Superintendent - DMS)
வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் (Chemical & Metallurgical Assistant - CMA)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3,993
பணியிடம்: தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி : மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல் பிரிவுகளில் இளநிலை பொறியாளர் பதவி நிரப்பப்படுகிறது. சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ (Diploma) அல்லது இன்ஜினியரிங் துறையில் பி.இ / பி.டெக் (B.E / B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கிடங்குப் பொருள் கண்காணிப்பாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு ஒரு பொறியியல் பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிக்கு இயற்பியல் அல்லது வேதியியல் ஆகிய பாடங்களை கொண்டு இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 33 வயது வரை இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின்படி, ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD – OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், PwBD – SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: இப்பதவிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி, நிலை 6 கீழ் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு 2 கட்ட கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவை நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பணி நியமனம் உறுதி செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டும்
விண்ணப்பக் கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். இருப்பினும் எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் இதர சிறுபான்மை பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட விதிமுறைகளின்படி தேர்வு கட்டணத்தின் ஒரு பகுதி திருப்பி வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
ரெயில்வே இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ அல்லது https://rrb.indianrailways.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.