

இந்தியன் ரெயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பினை ஆர்.ஆர்.பி என்டிபிசி (RRB NTPC) வெளியிட்டுள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர் (Ticket Supervisor), ஸ்டேஷன் மேனேஜர் (Station Master), சரக்கு ரெயில் மேலாளர் (Goods Train Manager), ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் உள்பட பல்வேறு பிரிவுகளில் 3,477 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மத்திய அரசு பணி என்பதால், ரெயில்வே பணிக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
நிறுவனம்: Railway Recruitment Board (RRB)
மொத்தம் பணியிடங்கள்: 3,477
வகை: மத்திய அரசு வேலை
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள் விவரம்:
தலைமை கமர்ஷியல் - டிக்கெட் சூப்பர்வைசர்
ஸ்டேஷன் மேனேஜர்
சரக்கு ரயில் மேலாளர்
ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் - டைப்பிஸ்ட்
சீனியர் கிளர்க் - டைப்பிஸ்ட்
டிராபிக் அசிஸ்டண்ட்
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு டிகிரி கல்வித் தகுதியுடன் ஆங்கிலம், இந்தியில் டைப்பிங் செய்யும் திறன் அவசியம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும், மாற்றுத்திறனாளிகள் (பொது / EWS) பிரிவினருக்கு 10 ஆண்கள் வரையும், மாற்றுத்திறனாளிகள் (SC / ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வரையும், மாற்றுத்திறனாளிகள் (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வரையும் உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு கொள்கையின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்:
தலைமை கமர்ஷியல் - டிக்கெட் சூப்பர்வைசர் - ரூ.35,400
ஸ்டேஷன் மேனேஜர் - ரூ.35,400
சரக்கு ரயில் மேலாளர் - ரூ.29,200
ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் - டைப்பிஸ்ட்- ரூ.29,200
சீனியர் கிளர்க் - டைப்பிஸ்ட்- ரூ. 29,200
டிராபிக் அசிஸ்டண்ட் - ரூ. 25,500
தேர்வு முறை:
கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். டைப்பிங் திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அதிகாரப்பூர்வ மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் இறுதிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் :
தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும். எஸ்சி/எஸ்டி, பெண்கள், EBC பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதும். தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பி தரப்படும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 08.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2026 இரவு 11:59 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbapply.gov.in வாயிலாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் www.rrbapply.gov.in ஆகும்.