

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 கிளார்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : Railway Recruitment Board (RRB)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3058
பணியிடம் : இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் : 28.10.2025
கடைசி நாள் : 27.11.2025
1.பதவி: Commercial – Ticket Clerk
காலியிடங்கள்: 2424
சம்பளம்: Rs.21,700/-
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
2.பதவி: Accounts Clerk – Typist
காலியிடங்கள்: 394
சம்பளம்: Rs.19,900/-
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினியில் ஆங்கிலம்/ இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
3.பதவி: Junior Clerk – Typist
காலியிடங்கள்: 163
சம்பளம்: Rs.19,900/-
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினியில் ஆங்கிலம்/ இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
4.பதவி: Trains Clerk
காலியிடங்கள்: 77
சம்பளம்: Rs.19,900/-
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு: 01.01.2026 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
1. முதல் நிலை கணினி வழித் தேர்வு (First Stage CBT)
2. இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (Second Stage CBT)
3. தட்டச்சு திறன் தேர்வு/ CBAT (பணிக்குத் தேவைப்பட்டால்)
4. ஆவண சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவப் பரிசோதனை (Medical Examination).
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.