+2 படிச்சிருந்தா போதும்... மத்திய அரசு வேலை ரெடி! – 1,688 ரயில்வே காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

12-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்..! ரயில்வே துறையில் 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
Indian railway
Indian railway
Updated on: 

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் பிரபலப் பணியிடங்களை (Non-Technical Popular Categories – NTPC) நிரப்புவதற்கான மத்தியப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு (Centralised Employment Notice – CEN) எண் 07/2026 வெளியிடப்பட்டுள்ளது. இளநிலைப் பிரிவில் (Under Graduate Level) மொத்தம் 1,688 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Commercial Ticket Clerk, Accounts Clerk, Junior Clerk மற்றும் Trains Clerk உள்ளிட்ட பணியிடங்களுக்கு மாதம் ₹19,900 முதல் ₹21,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியிடங்களின் விவரங்கள் :

இந்த ஆட்சேர்ப்பின் கீழ் நான்கு வகையான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • Commercial cum Ticket Clerk: 700 பணியிடங்கள்.

  • Accounts Clerk cum Typist: 200 பணியிடங்கள்.

  • Junior Clerk cum Typist: 600 பணியிடங்கள்.

  • Trains Clerk: 188 பணியிடங்கள்.

மொத்தம் 1,688 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனம் : Railway Recruitment Board (RRB)

அறிவிக்கை எண் :07/2026

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 1688

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 15.10.2026

கடைசி நாள் : 13.11.2026

1.பதவி: Commercial – Ticket Clerk

சம்பளம்: Rs.21,700/

கல்வி தகுதி: 12th pass

2.பதவி: Accounts Clerk – Typist

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 200

கல்வி தகுதி: 12th pass

3.பதவி: Junior Clerk – Typist

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 600

கல்வி தகுதி: 12th pass

4.பதவி: Trains Clerk

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 188

கல்வி தகுதி: 12th pass

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்

  • OBC – 3 ஆண்டுகள்

  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்

  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

Railway Jobs - RRB
Railway Jobs

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  • First Stage Computer Based Test (CBT)

  • Second Stage Computer Based Test (CBT)

  • Document Verification (DC)/ Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.

  • CEN 07/2026 – NTPC Graduate என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

  • New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.

  • Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

  • கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.

  • தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.

  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.

  • Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
"வங்கியில் வேலை பார்க்க ஆசையா?" – 1,100 காலியிடங்கள்... ₹1.20 லட்சம் வரை சம்பளம்!
Indian railway
logo
Kalki Online
kalkionline.com