இதை மிஸ் பண்ணாதீங்க! மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் உதவித்தொகை… உடனே விண்ணப்பிக்கவும்!

Scheme for students
Scheme for students
Published on

நீங்கள் பள்ளி, கல்லூரி அல்லது உயர்கல்வி படித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், எஸ்பிஐ பவுண்டேஷன் (SBI Foundation) வழங்கும் இந்த கல்வி உதவித்தொகைத் திட்டம் உங்களுக்கு நிச்சயம் உதவும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு உதவ, SBI பிளாட்டினம் ஜூபிலி ஆஷா உதவித்தொகை 2025-26 இப்போது விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்த ஆண்டு, சுமார் 23,230 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க, ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உதவியை யார் பெறலாம்?

பள்ளி மாணவர்கள் (9 முதல் 12 ஆம் வகுப்பு): முந்தைய தேர்வில் 75% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இவர்களுக்கு ரூ.15,000 வரை கிடைக்கும்.

கல்லூரி மாணவர்கள் (இளங்கலை, முதுகலை, மருத்துவம்): NIRF தரவரிசையில் முதல் 300 இடங்களில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் 75% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இளங்கலை மாணவர்களுக்கு: ரூ.75,000 வரை கிடைக்கும்.

முதுகலை மாணவர்களுக்கு: ரூ.2,50,000 வரை கிடைக்கும்.

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு: ரூ.4,50,000 வரை கிடைக்கும்.

ஐஐடி, ஐஐஎம் மாணவர்கள்: முந்தைய தேர்வில் 75% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஐஐடி மாணவர்களுக்கு: ரூ.2,00,000 வரை கிடைக்கும்.

ஐஐஎம் மாணவர்களுக்கு: ரூ.5,00,000 வரை கிடைக்கும்.

வெளிநாட்டில் படிக்கும் SC/ST மாணவர்கள்: QS/THE உலக தரவரிசையில் முதல் 200 இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் 75% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு ரூ.20,00,000 வரை கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி PF பணத்தை முழுமையாக எடுக்கலாம்..! வரப்போகிறது புதிய மாற்றம்..!
Scheme for students
  • SC/ST மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 10% தளர்வு உண்டு.

  • மொத்த இட ஒதுக்கீட்டில் 50% பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

  • மீதமுள்ள 50% SC/ST மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: நவம்பர் 15, 2025.

1.  sbiashascholarship.co.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

2.  உங்களது இமெயில் ஐடி, மொபைல் எண் அல்லது கூகிள் கணக்கு மூலம் பதிவு செய்து, ஒரு தனிப்பட்ட ஐடியை உருவாக்கவும்.

3.  உருவாக்கப்பட்ட ஐடி மூலம் உள்நுழைந்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

4.  தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

5.  விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன், சரிபார்த்து உறுதி செய்யவும்.

இதையும் படியுங்கள்:
TNPSC குரூப் 4: கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..??
Scheme for students

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

  • முந்தைய ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்

  • அரசு அங்கீகரித்த அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை)

  • வருமான சான்றிதழ்

  • பெற்றோரின் வங்கி கணக்கு விவரங்கள்

  • நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டண ரசீது அல்லது சேர்க்கைக்கான சான்று (அட்மிஷன் கடிதம், ஐடி கார்டு)

  • உங்களின் புகைப்படம்

  • சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்)

இந்த உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com