
சிம்லாவிற்கு அருகிலுள்ள நர்கண்டாவில் (Narkanda ) உள்ள ஒரு ஹோட்டலின் உணவு மெனு பற்றிய எக்ஸ் தள பதிவு, நாட்டில் உள்ள உணவகங்களின் அதிக விலைகள் பற்றிய ஆன்லைன் விவாதத்தைத் தூண்டியுள்ளது. தற்போது சமூக வலைதளத்தில் வைரலான இந்த பதிவு மூலம், குறிப்பிட்ட உணவுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் விலைகள் நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக இருப்பதாக பல பயனர்கள் உணர்ந்தனர்.
இந்த உணவு பட்டியலில் இந்திய உணவுகளில் தால் தட்கா விலை ரூ.650, ஜீரா ஆலு ரூ.699, பன்னீர் மக்கானி ரூ.700, தால் மக்கானி, தால் ராஜ்மா மசாலா, காளான் மட்டர் மற்றும் சில பொருட்களின் விலை ரூ.750 என குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் புர்ஜி மற்றும் பன்னீர் போன்ற பன்னீர் உணவுகள் ஒவ்வொன்றும் ரூ.799 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மற்றொரு மெனுவின் புகைப்படமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய சைடிஷ் உணவுகளான ரொட்டிகள் மற்றும் இனிப்புகளின் விலைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வேகவைத்த பாசுமதி அரிசி ரூ.450, புலாவ் ரூ.699, மசாலா/பிளைன் கிச்சடி ரூ.599, ரொட்டி, நான், பராத்தா ஆகியவற்றின் விலை ரூ.110 முதல் ரூ.180 வரை இருந்தது. குலாப் ஜாமூன் மற்றும் ரசகுல்லா ஆகிய இரண்டு இனிப்பு உணவுகள் மட்டுமே இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை இரண்டின் விலை ரூ. 299 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடுகையின் தலைப்பில், எக்ஸ் தள பயனர் இந்தியாவில் உள்ள 'crazy' உணவகம் மற்றும் ஹோட்டல் விலைகளில் தனது அதிருப்தியை உயர்த்திக் காட்டி உள்ளார். மேலும் 'மெனு அதன் விலைகளுடன் பொருந்தவில்லை' என்றும் அவர் எழுதி, அதை கீழே பாருங்கள் என்று அந்த புகைப்படத்தையும் (menu) இணைத்துள்ளார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, மற்றொரு எக்ஸ் பயனர், கிரீன்பெர்ரி என்ற உள்ளூர் ஹோட்டலின் மெனுவைக் கூறினார். சமூக வலைதளத்தில் வைரலான இந்த பதிவை பற்றி இணையத்தில் உள்ளவர்கள் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். இந்த விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக பலர் ஒப்புக்கொண்டனர். சில எதிர்வினையான கருத்துக்களை தெரிவித்தனர். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஒரு பயனர், 'மிகவும் முட்டாள்தனமான விலைகள். அவை மேரியட் விலையுடன் பொருந்துகின்றன… அந்த பகுதியில் தேவை மற்றும் வழங்கல் பற்றிய கேள்விக்குறியாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
மற்றொரு பயனர், 'WTH, தால் தட்கா ரூ.650, ரொட்டி ரூ.100+, சாதம் ரூ.450?, மிகச்சிறந்த எளிய உணவுப் பொருட்கள், ஆனால் அவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப ஆகும் செலவும் போல் உள்ளது??!!' என்று கூறியுள்ளார்.
அடுத்த பயனர், '100 கிமீ தூரத்தில் உள்ள ஒரே உணவகம் இதுதானா? அப்படியிருந்தும் அது மிக அதிகம்! நீங்கள் உடனே வெளியேற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சிலர், 'விலை பட்டியலை விட ஏன் மெனு கார்டு மிகவும் மலிவாக இருக்கிறது? குறைந்த பட்சம் அவர்கள் ஒரு நல்ல மெனு கார்டை ஏற்பாடு செய்யலாம்' என்றும், 'ஆமா! பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட அழுக்கு மெனு கார்டு 5 நட்சத்திர ஹோட்டலாக தெரியவில்லை! இது பகல் கொள்ளை' என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விலையுயர்ந்த உணவு மெனுவை முன்னிலைப்படுத்தும் ஒரு எக்ஸ் தள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமின்றி தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.