சீனாவில் தனிமையில் வசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2020-ல் 92 மில்லியனுக்கும் அதிகமானோர் தனிமையில் வசித்து வந்த நிலையில், 2024-ல் அது 100 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வதால் பெற்றோரிடமிருந்து விலகி தனியாக வாழ்கின்றனர். மேலும் இளைஞர்கள் மத்தியில் திருமண தாமதங்கள், நகரமயமாக்கல் மற்றும் பிற சமூக மாற்றங்களால் இந்த போக்கு அதிகரிக்கிறது. இது தனிமையின் அதிகரிப்பு மற்றும் ‘யாரும் கவனிக்காத நிலையில் இறந்துவிடுவோமோ’ என்ற கவலைகளை உருவாக்குகிறது. சீனாவில் அதிகரித்து வரும் தனிமை, குறிப்பாக முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே சமூகப் பிரச்சினையாக மாறி வருகிறது. சீன அரசும் முதியோர் பராமரிப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது என்றாலும், தனிமையில் வாழும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையாக உள்ளது.
இந்நிலையில் சீனாவில் தனியாக இருப்பவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிகரித்து வரும் தனிமை (Loneliness Epidemic) காரணமாக மற்றும் தனியாக இருப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்புக்கு துணையாக 'Are You Dead?' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘சைலேம்’ (நீங்கள் இறந்துவிட்டீர்களா) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிபிசி அறிக்கையின்படி, சீன மொழியில் 'Si Le Me' என்று அழைக்கப்படும் 'Are You Dead?' என்ற புதிய செயலி, சீனாவில் தனிமையில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தை இந்த செயலி நிவர்த்தி செய்வதாக கூறப்படுகிறது.
அதாவது, தனிமையில் வசிக்கும் மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல் கண்டறியப்படாமல் போகலாம் என்ற பயத்தால், சீனாவில், Are You Dead? செயலி போன்ற சேவைகள் பிரபலமடைந்து வருகின்றன, இது அவர்களின் மரணம் குறித்து உறவினர்களுக்குத் தெரிவிக்க உதவுகிறது.
‘Are You Dead?’ செயலி, சீனாவில் மிகவும் வைரலான நிலையில், தற்போது கட்டண செயலியாகவும் மாறியுள்ளது. இந்த செயலி நடைமுறை மிகவும் எனிமையானது என்றும், பதிவு செய்யத் தேவையில்லை, தனிப்பட்ட தரவுகளைப் பகிரத் தேவையில்லை, பயன்படுத்த மிகவும் எளிதானது என்றும் கூறப்படுகிறது.
தனிமையில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கும் ஒருமுறை அந்த செயலியில் ஒரு பட்டனை அழுத்தி, உயிருடன் இருக்கிறேன் என்பதை பயனர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அதாவது, தனிமையில் உள்ளவர்கள், தங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அவசரத் தொடர்புக்குத் தெரிவிக்க உதவும் வகையில், பயனர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் (2 நாட்களுக்கு ஒருமுறை) செயலியைப் பயன்படுத்தி உயிருடன் இருப்பதைக் காட்ட வேண்டும், இல்லையென்றால் அவசரத் தொடர்புக்கு எச்சரிக்கை அனுப்பப்படும். இது தனிமையின் தாக்கத்தைக் குறைக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது.
ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், செயலி தானாகவே அவர் ஏற்கனவே பதிவு செய்துள்ள அவசர காலத் தொடர்பு நபருக்கு(Emergency Contact) மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை சென்று நேரில் வந்து விசாரிப்பார்கள்.
இந்த செயலி மிகவும் வைரலான நிலையில் தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், இது சீனாவில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மிகவும் வைரலான நிலையில், சர்வதேச சந்தையில் இது Demumu என்ற பெயரில் கிடைப்பதோடு, தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், இது சீனாவில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பிபிசி அறிக்கையின்படி, இந்த செயலி அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் முதல் இரண்டு இடங்களிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினில் முதல் நான்கு இடங்களிலும் கட்டண பயன்பாட்டு செயலிகளில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலும், இந்த செயலி தற்போது நாட்டில் இரண்டாவது அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டண செயலியாக பிரபலமடைந்துள்ளது. இந்த கட்டண செயலியின் விலை சீனாவில் 08 யுவானாகவும், இந்தியாவில் ரூ.99 ஆகவும் உள்ளது.
இந்த செயலி குறித்து நிபுணர்களின் கூற்றுப்படி, 2030-ம் ஆண்டுக்குள் இது 200 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் அதிகளவில் மக்கள் தனிமையில் வசித்து வருவது அதிகரித்துள்ள நிலையில் இந்த செயலி அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.