இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான State Bank of India (SBI), 2026ஆம் ஆண்டிற்கான Junior Associate (Customer Support & Sales) – Clerk பணியிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 9,124 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 1,410 Regular காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு இது சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிற்கு தான் அதிகளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1718-ம், தமிழ்நாட்டில் 1,410 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI Recruitment) :
வேலைவாய்ப்பு : மத்திய அரசு வேலை
நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India - SBI)
பதவி : இளநிலை உதவியாளர் (Junior Associate) (Customer Support & Sales) – Clerk
பதவி வகை : Clerical Cadre
மொத்த காலியிடங்கள் : 9,124
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Any Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 2026 ஏப்ரல் 1-ம்தேதிப்படி 20 – 28 வயது (விண்ணப்பதாரர் 1998 ஏப்ரல் 2-ம்தேதிக்கு முன்பாகவும், 2006 ஏப்ரல் 1-ம்தேதிக்கு பின்னும் பிறந்திருக்கக் கூடாது)
வயது தளர்வு : SC / ST 5 ஆண்டுகளும், OBC (NCL) 3 ஆண்டுகளும், PwBD – UR 10 ஆண்டுகளும், PwBD – OBC 13 ஆண்டுகளும், PwBD – SC/ST 15 ஆண்டுகளும், Ex-Servicemen அரசு விதிமுறைகளின்படியும் தளர்வு உண்டு.
சம்பளம் : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பள விகிதம் வழங்கப்படும். (SBI போன்ற முன்னணி பொதுத்துறை வங்கியில் நிரந்தர பணியாக இருப்பதால், சம்பளத்துடன் நிறுவன விதிமுறைகளின்படி பொருந்தக்கூடிய பல்வேறு சலுகைகளும் கிடைக்கும்)
பணியிடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் : SC / ST / PwBD / XS / DXS பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.750 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கடைசி தேதி : 31.08.2026
அதிகாரப்பூர்வ இணையதளம் : sbi.bank.in
தேர்வு முறை :
முதற்கட்டத் தேர்வு (Preliminary Examination)
முதன்மைத் தேர்வு (Main Examination)
உள்ளூர் மொழித் திறன் தேர்வு (Local Language Proficiency Test -LPT)
முதற்கட்டத் தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்டமான Main Examination-க்கு செல்ல முடியும்.
தேர்வு மையங்கள் :
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னை உள்பட கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர் மற்று;ம விழுப்புரம் ஆகிய இடங்களில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள்வரை காத்திருக்காமல், முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.