டீ குடிப்பதை நிறுத்தினால் லட்சாதிபதியாகலாம்! SBI வழங்கும் அட்டகாசமான RD திட்டம்..!

தினமும் ரூ.20 சேமித்தால் லட்சாதிபதியாகலாம்! SBI வழங்கும் 'ஹர் கர் லாக்பதி' RD திட்டம்!
SBI
SBI
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இந்திய ஸ்டேட் வங்கி (SBI) அறிமுகம் செய்துள்ள Har Ghar Lakhpati என்பது சிறிய சேமிப்பு மூலம் வாடிக்கையாளர்களை லட்சாதிபதியாக்கும் ஒரு பிரத்யேக ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டமாகும்.

டீ குடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு ஆகும் செலவை, தொடர் வைப்புத் திட்டத்தில் செலுத்தி, ஒவ்வொருவரும் லட்சாதிபதியாகலாம் என்று, நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ‘ஹர் கர் லாக்பதி’ (Har Ghar Lakhpati - HGL) என்ற புதிய தொடர் வைப்பு நிதி திட்டத்தை RD-Recurring Deposit) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, முதிர்பு காலத்தில் ரூ.1 லட்சம் அல்லது அதன் மடங்குகளில் தொகையை பெற முடியும்.

இந்த திட்டம் வழக்கமான தொடர் வைப்பு நிதி போல செயல்பட்டாலும், வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்பு இலக்கை அடைய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 1 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் காலத்தை தேர்வு செய்யலாம். முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை திரும்ப பெற விரும்பினால் அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய அளவில் பணம் சேமித்து, கால அவகாசம் முடியும் போது ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் எளிதாகப் பெற இந்தத் திட்டம் உதவுகிறது. அதன்படி இந்தத் திட்டத்தின் உதவியுடன், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் நிதியை உருவாக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய சேமிப்புகளை வைப்புச் செய்வதன் மூலம் தங்கள் கணக்குகளில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் திரட்டி, அந்த வைப்புத்தொகை முதிர்வடையும் போது லட்சாதிபதி ஆக முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் :

மாத சேமிப்பு: தினமும் சுமார் ரூ.20 (மாதத்திற்கு தோராயமாக ரூ.600) சேமிப்பதன் மூலம் 10 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான நிதியை உருவாக்கலாம். உங்கள் மாதாந்திர முதலீட்டுத் திறனைப் பொறுத்து, முதலீட்டை ரூ.5000 அல்லது ரூ.6000 என அதிகரித்தால் ரூ.10 லட்சத்திற்கு அதிபதியாவீர்கள்.

கால அவகாசம்: இந்த ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் இந்த தொடர் வைப்புத் திட்டத்தின் காலம் 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) முதல் அதிகபட்சம் 120 மாதங்கள் (10 ஆண்டுகள்) வரை முதலீடு செய்ய முடியும்.

நோக்கம்: நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள குடும்பங்கள் சிறு சேமிப்பு மூலம் எளிதாக ₹1 லட்சம் அல்லது அதன் மடங்குகளில் (₹2 லட்சம், ₹3 லட்சம் போன்றவை) பெரிய தொகையைச் சேமிக்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

SBI
SBI

வட்டி விகிதம்: எஸ்பிஐ-இன் வழக்கமான RD திட்டங்களுக்கான வட்டி விகிதமே இதற்கும் பொருந்தும். அதன்படி, 3 அல்லது 4 ஆண்டுகள் முதிர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​பொது வாடிக்கையாளர்களுக்குச் சராரியாக 6.50% முதல் 6.75% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 7.00% முதல் 7.25% வரையிலும் கூடுதல் வட்டி கிடைக்கும்.

யாரெல்லாம் சேரலாம்: இந்தியாவின் எந்தக் குடிமகனும் இதில் கணக்கு தொடங்கலாம். தனியாகவும் அல்லது இருவர் இணைந்தும் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் (மைனர்கள்) தங்கள் பெயரில் இக்கணக்கைத் தொடங்கலாம். சிறிய குழந்தைகளுக்குப் பெற்றோர் பாதுகாவலராக இருக்கலம்.

கடன் வசதி: அவசரத் தேவைக்குச் சேமித்த தொகையில் 90% வரை கடன் அல்லது ஓவர் டிராஃப்ட் (Overdraft) பெறலாம்.

முதிர்வு தொகை வழங்கப்படும் தேதி: இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதிர்வுத் தொகை (Maturity amount) கணக்கிடப்படும் போது, அது அருகிலுள்ள ரூபாய்க்கு முழுமையாக்கப்பட்டு (Rounded off) வழங்கப்படும். தொடர் வைப்புத் திட்டத்தின் (RD) முதிர்வுத் தொகை, கடைசித் தவணை செலுத்தப்பட்ட 30 நாள்களுக்குப் பிறகு அல்லது ஒரு மாதத்திற்குப் பிறகு, அல்லது வைப்புத் தொகை ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அளவு முடிவடையும் தேதி (Tenure Expiry)- ஆகிய இவற்றில் எது அதிகபட்சமோ (whichever is later), அந்தத் தேதியில் முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கார்பஸ் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க...

பொது வாடிக்கையாளர்கள்:

பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி: ஆண்டுக்கு 6.30%

மாதாந்திர முதலீடு: ரூ.6,000

மொத்த வைப்புத்தொகை: ரூ.7,20,000 (6,000 x 120)

முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை: ரூ.10,02,878

வட்டியாக கிடைக்கும் வருமானம் மட்டும்: ரூ.2,82,878

மாதம் (தினமும் ரூ.200) ரூ.6000 நான் இந்த திட்டத்தில் செலுத்தினால் 10 ஆண்டுகளில் நமக்கு வட்டியாக மட்டுமே ரூ.2,82,878 வருமானம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் உயர்கல்விக்கு கடன் வாங்க தேவையில்லை! இன்றே செய்ய வேண்டிய 5 முதலீடுகள்!
SBI
logo
Kalki Online
kalkionline.com