சிறு வணிகர்களுக்கு குட் நியூஸ்!உங்க வங்கி கணக்கில் ரூ.10,000 வர போகுது..! விண்ணப்பிப்பது எப்படி?

வணிகர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம், சிறு வணிகக் குடும்பங்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக உள்ளது.
education loan
education loan
Published on

தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் சிறு வணிகர்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பல்வேறு பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றனர். இவர்கள் நடத்தும் சிறு வணிகங்கள் மூலம் கிடைக்கம் வருமானம் குடும்பத்தின் முக்கிய வருமான ஆதாரமாக இருந்தாலும், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் காரணமாக கல்விச் செலவுகளைச் சமாளிப்பது பலருக்கு சிரமமாக உள்ளது.

குறிப்பாக அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகள் குடும்பத்திற்கு கூடுதல் சுமையாக மாறுகிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையின் மூலம் வணிகர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கல்லூரியில் படிக்கும் வணிகர்களின் பிள்ளைகளுக்கு ரூ.5,000 நிதி வழங்கப்படுகிறது. அதே போல் தொழில்கல்வி படிப்பவர்களுக்கு ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த தொகையை தமிழக அரசு நேரடியாக மாணவர்களின் அல்லது பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், கல்விச் செலவுகளுக்கு உடனடி உதவியாக இருக்கிறது. இந்த முயற்சி சிறு வணிகக் குடும்பங்களின் உள்ள குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி படிக்க ஆசைப்படும் அவர்களின் கனவை நிறைவேற்றவும், அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதி உதவி முக்கிய பங்காற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை.! தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய்.!
education loan

சிறு வணிகர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்வதும், தொழிற்கல்வி மற்றும் திறன் சார்ந்த கல்வியை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார சுமையைக் குறைத்து கல்வி தொடரவும், வணிக சமூகத்தின் சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதுமே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அரசின் சமீபத்திய நிதி திட்டத்தில், 2025-26 நிதியாண்டிற்காக ரூ.50 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சுமார் 1 லட்சம் மாணவர்கள் இந்த உதவியை பெற வாய்ப்பு உள்ளது. இதில் விண்ணப்பித்து பயனாளிகள் பயனடைய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உங்களுக்கு தேவையான விவரங்களை அருகாமையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் விவரங்களை கேட்டறியலாம்.

யாரெல்லாம் தகுதியானவர்கள் :

இந்த கல்வி உதவித் தொகை சில குறிப்பிட்ட தகுதிகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

* கல்வி உதவித் தொகை பெற விரும்பவும் மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வணிகராக இருக்க வேண்டும்

* பெற்றோருக்கு GST அல்லது வணிக வரி பதிவு இருக்க வேண்டும்.

* மாணவர் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டியது கட்டாயம்.

* அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த உதவி பொருந்தும்.

கல்வி அடிப்படையில் வழங்கப்படும் உதவி.?

கல்லூரி பட்டப்படிப்பு / மேற்படிப்பு – ரு.5,000

தொழிற்கல்வி (ITI, Polytechnic போன்றவை) – ரூ.10,000

தொழிற்கல்விக்கு அதிக உதவி வழங்கப்படுவது, இளைஞர்கள் திறன் சார்ந்த கல்வியை தேர்வு செய்ய ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே என அதிகாரிகள் விளக்குகின்றனர்.

தேவையான ஆவணங்கள் :

ஆதார் அல்லது பான் அடையாள ஆவணம்

மாணவரின் பிறப்புச் சான்று

கல்லூரி சேர்க்கை சான்று அல்லது கல்வி சான்றிதழ்

மதிப்பெண் பட்டியல்

வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பாஸ்புக் நகல்

குடும்ப வருமானச் சான்று

பெற்றோரின் GST அல்லது வணிக பதிவு சான்று

மேற்கூறிய இந்த ஆவணங்கள் சரியாக இருந்தால், பொதுவாக 30 நாட்களுக்குள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த திட்டத்திற்கு மாணவர்கள் இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்.

* உங்கள் பகுதியில் உள்ள வணிகவரி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து தேவையான ஆணங்களை அதனுடன் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

* மாணவர்கள் அல்லது பெற்றோர் அதிகாரப்பூர்வ போர்ட்டல் (Tamilnilam Portal )மூலம் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். சமீபத்திய தகவலின்படி, 60% விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாகவே பெறப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை..! எவ்வளவு? என்ன தகுதி? முழு விவரம் இதோ!
education loan

- தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com