#BREAKING: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை.! தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய்.!

Erode TVK Party Meet
TVK Actor Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இன்று மாமல்லபுரத்தில் மிகப்பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்று தலைவர் விஜய் தேர்தல் வாக்கு விதிகளை அளிக்க விற்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

மகளிர் தின விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், விஜய் முதலில் கொள்கை தலைவர்களான வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு மலர் தூவி வழங்கினார்.

அதன் பிறகு சிங்கப்பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் என விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்:

* பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த தனித்துறை ஒதுக்கப்படும். இந்த துறை எனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கண்காணிக்கப்படும். இதுவே தவெக-வின் முதல் வாக்குறுதி.

* 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும். மாநிலம் மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

* அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாகவும் வழங்கப்படும்.

* பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேலுநாச்சியார் படையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதி விரைவு நீதிமன்றமும் அமைக்கப்படும்.

* சாதாரண உடைகள் இருக்கும் பெண்கள் படை, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.

* பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்க நகையும், தரமான பட்டு சேலையும் தாய் விட்டு சீராக அண்ணன் சார்பில் வழங்கப்படும்.

*தவெக ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இனி பார்க்கிங் இலவசம்! சினிமா ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.!
Erode TVK Party Meet
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்! இனி 2-வது குழந்தை பிறந்தால் ரூ.25,000 கிடைக்கும் - மாநில அரசு அறிவிப்பு..!
Erode TVK Party Meet
logo
Kalki Online
kalkionline.com