பென்சன் வாங்குவோருக்கு நவம்பர் 1 முதல் நவ.30 வரை சிறப்பு முகாம்: இடம், தேதி நோட் பண்ணிக்கோங்க..!!

தமிழ்நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சிறப்பு முகாம் குறித்த முழு விவரங்கள்.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தொலைத்தொடர்பு துறை மற்றும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பிரத்யேக டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் முகாம்களை நவம்பர் மாதம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்துகின்றன.

அதாவது, நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (Digital Life Certificate - DLC) சிறப்பு முகாம் நாளை மறுநாள் அதாவது, நவம்பர் 1-ம்தேதி முதல் நவம்பர் 30-ம்தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, கோவை, மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தொலைத்தொடர்புத் துறை மற்றும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்காக நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் 5.0 நடத்தப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் தற்போதைய நிலையைச் சரிபார்த்து, மாதாந்திர ஓய்வூதியம் தடையின்றி தொடர்ந்து கிடைக்க இந்த முகாம்களில் கலந்துகொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் சேவை வழங்கும் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அதன்படி, 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த ஓய்வூதியதாரர்கள் அக்டோபர் 1 முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தொடங்கலாம். மற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கக் காலக்கெடு வழங்கப்பட்டது.

ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 'Postinfo' செயலி அல்லது இணையதளம் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தெற்கு மத்திய ரெயில்வே(SCR), ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், ஒரு எளிய டிஜிட்டல் செயல்முறையின் மூலம் தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழ்களை சமர்பிக்க ஏதுவாக நவம்பர் 1 முதல் 30 வரை அதிகார வரம்பு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்(DLC) நடைமுறை தொடங்கி உள்ளது.

ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தின் மூலம் ஓய்வூதிய பணம் தடை தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

ஓய்வூதியம்|டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்
ஓய்வூதியம்|டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்AI Image

முக்கிய விவரங்கள்:

முகாம் நடைபெறும் நாள்: நவம்பர் 1-ம்தேதி முதல் நவம்பர் 30-ம்தேதி வரை.

நோக்கம் : ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பித்து, மாதாந்திர பென்சன் தடையின்றி பெற உதவுவது.

இடங்கள்: எத்திராஜ் சாலையில் உள்ள முதன்மை தொலைத்தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (Pr. CCA) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைத்தொடர்பு/பிஎஸ்என்எல் (BSNL) அலுவலகங்கள்.

பிற மாவட்டங்கள்: கோயம்புத்தூர் (நவம்பர் 2), ஈரோடு மற்றும் திருச்சி (நவம்பர் 13), சேலம் (நவம்பர் 20) உள்ளிட்ட முக்கிய பிஎஸ்என்எல் / அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

அஞ்சலகங்கள்: நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மற்றும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (IPPB) மூலமாகவும் சிறப்பு முகாம்கள் மற்றும் வீட்டு வாசலில் (Doorstep service) சேவை வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டம் பாதகமா..? சாதகமா..?
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்

கவனிக்க வேண்டியவை:

* செல்லும்போது ஓய்வூதிய உத்தரவு (PPO) எண், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

* இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் ஓய்வூதியதாரர்கள், ஆதார், ஓய்வூதியதாரரின் பெயர், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் முழுமையான விவரங்கள் அடங்கிய ஓய்வூதிய கணக்கு (PPO) புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட ஆயுள் சான்றிதழ் படிவம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

* விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள வங்கி கிளை அல்லது அஞ்சலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
2027 ஓய்வூதிய உயர்வு எவ்வளவு தெரியுமா... இந்த குட் நியூஸ உடனே படிங்க!
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்

* மேலும் இந்த முகாம் தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழ்நாடு வட்டார முதன்மை தொலைத்தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தை 044-28264568 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது aopda.tn-dot@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.