"இது புரிந்துணர்வு ஒப்பந்தம்!" - சீமான் கிளப்பிய புது குண்டு: அதிமுகவின் 'தக் லைஃப்' தொகுதிப் பங்கீடு!

admk -nda alliance
admk -nda alliance image source:millenium post
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர்கள் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பற்றி கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் " ஆழ்ந்து கவனித்தால் , எங்கெங்கெல்லாம் திமுகவின் அமைச்சர்கள் தேர்தலில் நிற்கிறார்களோ? , அந்த இடங்களை எல்லாம் கூட்டணிக் காட்சியான பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கியுள்ளது". அந்த இடங்களில் நிற்கும் திமுக, பாஜக வரக்கூடாது,  பாஜக வரக்கூடாது என்று சொல்லியே வெற்றி பெற்று விடுவார்கள். இதெல்லாம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் என்று சீமான் கூறியுள்ளார். 

சீமானின் இந்த பதிலை சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டு வருகின்றனர். அதிமுக தன் கூட்டணி கட்சிகளான பாஜக , அமமுக , தமாக போன்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்காமல் , திமுகவின் கோட்டையாக விளங்கும் தொகுதிகளை தள்ளி விட்டதாக , அதிமுக கூட்டணி கட்சியினர் விவாதித்துக் கொண்டுள்ளனர். இன்று திமுக கூட்டணி கட்சிகள் ," திமுக அமைச்சர்கள் நிற்கும் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை தோல்வி பயத்தின் காரணமாக, தங்களது கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கி உள்ளதாக" விமர்சித்திருந்தனர். 

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளும் , அமமுகவிற்கு 11 தொகுதிகளும் , தமிழ் மாநில காங்கிரசுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளன. இதில் பாஜகவிற்கு ஒதுக்கிய தொகுதிகளை அலசினால், 

சாதகமான தொகுதிகள்: 

நாகர்கோவில் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகள் பாஜகவின் சிட்டிங் சட்டமன்ற தொகுதிகள் ஆகும். அதிமுக 5 முறை வென்ற அவினாசி, 3 முறை வென்ற கோவை வடக்கு ஆகிய வெற்றிவாய்ப்பு தொகுதிகளையும் பாஜகவிற்கு கொடுத்துள்ளது.

கடினமான தொகுதிகள்:

அதே நேரம் தொடர்ச்சியாக 7 முறை திமுக வென்ற திருவாரூர் , 6 முறை திமுக வென்ற திருவண்ணாமலை (அமைச்சர் தொகுதி),  தொடர்ச்சியாக 3 முறை திமுக வென்ற திருச்செந்தூர் (அமைச்சர் தொகுதி),  திமுக தொடர்ச்சியாக 4 முறை வென்ற பத்மநாபபுரம் , காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 4 முறை வென்ற குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகள் , மேலும் திமுக தொடர்ச்சியாக 2 முறை வென்ற புதுக்கோட்டை , திருப்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் , தொடர்ச்சியாக 3 முறை கம்யூனிஸ்ட் கட்சி வென்ற தளி , அமைச்சர் தொகுதியான ஆவடி ஆகியவற்றை பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் அனைத்தும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளாக உள்ளது.

அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:

அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளில் மடத்துக்குளம் ஒன்று மட்டுமே அதிமுக வென்ற தொகுதி. 

கடினமான தொகுதிகள்:

அமமூகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், பூந்தமல்லி மற்றும் திருச்சி மேற்கு (அமைச்சர் தொகுதி) ஆகியவை திமுக தொடர்ச்சியாக, இரண்டு தேர்தல்களில் 70,000 க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வென்றவை. மன்னார்குடி 6 முறை தொடர்ச்சியாக திமுக வென்ற தொகுதி. திருப்பத்தூர், ஓட்டப்பிடாரம், சைதாப்பேட்டை , பெரியகுளம் , திருவையாறு ஆகிய தொகுதிகளில் திமுக தொடர்ச்சியாக 2 முறை வென்றுள்ளது. நாங்குநேரி , காரைக்குடி ஆகியவை காங்கிரஸ் கட்சி இறுதியாக வென்ற தொகுதிகள்.

தமாகா கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகள்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கியுள்ள தொகுதிகள் அனைத்துமே திமுகவின் இரும்புக் கோட்டையாக இருப்பவை. கும்பகோணம் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் திமுக 6 முறை தொடர் வெற்றி பெற்றுள்ளது. கிள்ளியூர் தொகுதி தொடர்ச்சியாக காங்கிரஸ் 4 முறை வென்ற தொகுதி. ராணிப்பேட்டை கடைசி 2 முறை திமுக வென்ற தொகுதி , ஈரோடு மேற்கு தொகுதி திமுகவின் சிட்டிங் தொகுதியாக உள்ளது. 

மற்ற கட்சிகளுக்கு கடின தொகுதிகளை ஒதுக்கினாலும் பாமகவிற்கு சாதகமான தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம்  பாமகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் ஒன்றாக எடப்பாடி தொகுதி இருப்பது தான். தர்மபுரி , பென்னாகரம் , மேட்டூர் ஆகிய சிட்டிங் தொகுதிகளை பாமகவிற்கு கொடுத்துள்ளது. மேலும் போனஸாக அதிமுகவின் சிட்டிங் தொகுதியான சேலம் மேற்கு தொகுதியையும் வழங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் பாமக 2 ஆயிரம் வாக்குகளில் தோற்ற  மயிலாடுதுறை , திருப்போரூர் , உத்திரமேரூர் ஆகிய சாதகமான தொகுதியையும் வாரி வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 20 நாட்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்..! உத்தேச பயணத் திட்டம் வெளியீடு!
admk -nda alliance

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com