

இந்திய ரெயில்வே வசதியான ஒரு போக்குவரத்து முறை. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரெயிலில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் பயணிகளுக்கு எந்த சிக்கலும் வராத வகையில் இந்திய ரெயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் போது, ரெயில் பயணத்தையே வசதியாக தேர்வு செய்கின்றனர். ஏனெனில் அது பல வசதிகளை வழங்குகிறது. அதோடு டிக்கெட்டுகளும் விமான கட்டணத்தை விட குறைவான விலையில் டிக்கெட் கட்டணமும் இருப்பதால் மக்கள் பலரும் ரெயில் மூலம் பயணம் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். இதற்காகவே பெரும்பாலான மக்கள் ரெயிலில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
அந்த வகையில் ரெயிலில் முன்பதிவு செய்த கன்பார்ம் டிக்கெட்டில் பயணிப்பதற்கு புதிய விதிமுறை ரெயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த விதிமுறையை நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருவேளை அந்த விதியை தெரியாமல் நீங்கள் பயணம் செய்தால் உங்கள் டிக்கெட் செல்லாததாக கருதப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ரெயிலில் இருந்தும் நீங்கள் இறக்கிவிடப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் ரெயில் பயணியாக நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.
அதாவது, ரெயிலில் கன்பார்ம் டிக்கெட் (Confirmed Seat) இருந்தாலும், குறிப்பிட்ட விதிமுறைகளை மீறினால் உங்களுடைய சீட் பறிபோக வாய்ப்புள்ளது என்று சொன்னால் நீங்க நம்புவீங்களா. ஆமாங்க ரெயில்வே புது விதியை கொண்டு வந்திருக்காங்க. முன்னாடி எல்லாம் நீங்க புக்கிங் பண்ண ஸ்டேஷனில் ஏறவில்லை என்றால் அடுத்த இரண்டு ஸ்டேஷன் வரைக்கும் TTE வெயிட் பண்ணுவாரு. ஆனால் தற்போது வந்து புதிய விதிமுறைகளின் படி அப்படி செய்ய முடியாது.
இப்போது TTE கையில் ஹச்டி (Hand-Held Terminals - HHTs)எனப்படும் டேப்லெட்டடுகள் இருக்கு. இந்திய ரெயில்வேயின் புதிய விதிமுறைகளின்படி, ரெயில் உங்கள் போர்டிங் நிலையத்தில் (Boarding Point) இருந்து புறப்பட்டு, நீங்க உங்க ஸ்டேஷனில் ஏறவில்லை என்று தெரிந்தால் உங்களுடைய கன்பார்ம் சீட் ரத்து செய்யப்பட்டு RAC அல்லது காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) (RAC/WL) உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படலாம்.
அதாவது, நீங்கள் முன்பதிவு செய்த நிலையத்தில் ஏறத் தவறினால் (Boarding Point), TTE உடனடியாக அந்த இருக்கையை வேறு நபருக்கு (Current Booking-ல்) ஒதுக்கிவிடுவார்.
TTEக்கள் இனி ஒன்று அல்லது இரண்டு ரெயில் நிலையங்களுக்கு காத்திருக்க மாட்டார்கள், வருகை தராத பயணிகளை "நோ-ஷோ" (No-Show) என்று குறிப்பிடுவார்கள்
நீங்கள் ரெயிலில் ஏறவில்லை என தெரிந்து உங்கள் சீட் வேறு யாருக்காவது ஒதுக்கப்பட்டால் உடனே உங்கள் செல்போனுக்கு SMS வரும். ஆனால் டிக்கெட் புக்கிங் செய்யும் போது உங்களுடைய மொபைல் நம்பரை கொடுக்கவில்லை என்றால் அந்த அலர்ட் கூட உங்களுக்கு வராது.
அதனால் ரெயிலை தவறவிட்டால் அடுத்த ஸ்டேஷனில் கூட போய் நீங்க இனிமேல் ஏறமுடியாது. டிக்கெட்டில் உள்ள போர்டிங் நிலையத்திற்குப் பதிலாக வேறு நிலையத்தில் ஏறினால், அந்த டிக்கெட் செல்லாததாகிவிடும். இனிமேல் டிக்கெட்டில் இருக்கும் ஸ்டேஷனில் சரியாக ஏறுங்கள்.
ஒருவேளை வேறு ஸ்டேஷனில் ஏற வேண்டும் என்றால் 24 நேரத்திற்கு முன்னால் போர்டிங் பாயிண்ட்டை மாற்றி விடுங்கள். அதாவது, நீங்கள் தாமதமாக வருவதாக இருந்தால், முன்கூட்டியே TTE-க்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் உங்கள் சீட் பறிபோவதை தவிர்க்கலாம்.
இந்த புதிய விதிகளின்படி, காலியாக உள்ள இடங்களை அதிகபட்ச பயணிகளுக்கு பயன்படுத்த TTE-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் உங்களிடம் கன்பார்ம் டிக்கெட் இருந்தும், வேறு நபர் உங்கள் சீட்டில் இருந்தால், உடனடியாக அந்த ரெயிலின் TTE-ஐ அணுகி புகார் அளிக்கவும். அல்லது ஆன்லைனில், RailMadad ஆப் (RailMadad app) அல்லது இணையதளம் மூலமாகப் புகார் தெரிவித்தால், சில நிமிடங்களில் TTE மூலம் இருக்கை மீட்டுத் தரப்படும்.