அவசர எச்சரிக்கை: உடனே மொபைல் சாப்ட்வேரை அப்டேட் பண்ணுங்க பாஸ்.!இல்லைனா சிக்கல் தான்.!

Mobile software update to prevent cyber issues
Software Update
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இன்றைய நவீன உலகில் சைபர் மோசடிகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகளவில் நடப்பதை, மோசடிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலமிது. இல்லையெனில் தங்கள் நீண்ட கால சேமிப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

ஏற்கனவே பலரும் சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித கேள்வியுமின்றி ரூ.25,000 இழப்பீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, உங்கள் மொபைல் போனின் சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மொபைல் போனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் டேட்டா திருட்டு என்பது மிகப்பெரிய சைபர் மோசடியாக உருவெடுத்துள்ளது.

நாம் பயன்படுத்தும் சில செயலிகளின் மூலம், நம்முடைய மொபைல் டேட்டாக்கள் அனைத்தும் திருடப்பட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதற்கு நம்முடைய மொபைல் போனில் உள்ள செக்யூரிட்டி அம்சமும் ஒரு காரணம்.

செக்யூரிட்டி அம்சம் பாதுகாப்பானதாக இல்லையெனில், மோசடிகாரர்களுக்கு டேட்டா திருட்டு மிக எளிதான காரியமாகி விடும். இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மொபைல் சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்கும் குறைவான சாப்ட்வேர்களை பயன்படுத்துபவர்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்காது. செக்யூரிட்டி அப்டேட் ஆகவில்லை எனில், உங்கள் மொபைல் போனில் இருக்கும் டேட்டாக்கள் மிக எளிதாக திருடப்பட்டு விடும்.

ஆகையால் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் உடனே தங்களுடைய சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். சைபர் மோசடிகள் மற்றும் டேட்டா திருட்டு உள்ளிட்ட டிஜிட்டல் மோசடிகளில் இருந்து தப்பிக்க, முதலில் உங்கள் சாப்ட்வேரை அப்டேட் செய்யுங்கள்.

மேலும் அவ்வபோது உங்கள் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொள்வது இது போன்ற மோசடிகளில் இருந்து உங்கள் டேட்டாவை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ஆதார் கார்டை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்...? பயன்படுத்தக் கூடாத இடம் எது?
Mobile software update to prevent cyber issues

சாப்ட்வேர் அப்டேட் செய்யும் வழிமுறை:

* உங்கள் மொபைல் போன் Settings-க்குச் சென்று, Software Update என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* அப்டேட் செய்வதற்கு முன்பு தற்போது உங்கள் மொபைல் போனில் எந்த வகையான சாப்ட்வேர் பயன்பாட்டில் இருக்கிறது என்பது தெரியும்.

* சாப்ட்வேர் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டிருந்தால், Upto Date என இருக்கும். இல்லையெனில் அப்டேட் சாப்ட்வேர் என கீழே காண்பிக்கும்.

* இதனை கிளிக் செய்து உங்கள் மொபைல் சாப்ட்வேரை அப்டேட் செய்யலாம்.

* சாப்ட்வேர் அப்டேட் ஆனதற்குப் பிறகு, உங்கள் மொபைல் போன் தானாகவே சுவிட்ச் ஆஃப் ஆகி ஆன் ஆகும்.

இதையும் படியுங்கள்:
மொபைல் போனை EMI-இல் வாங்கியவர்களே உஷார்..! உங்க போனுக்கு ஆபத்து வரப்போகுது..!
Mobile software update to prevent cyber issues
logo
Kalki Online
kalkionline.com