டிரம்பின் ஒற்றை அறிவிப்பு: கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு... இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

ஈரானுடனான போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Trump
Trump
Updated on

ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மற்றும் போர் நிறுத்த முயற்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதில் பேசிய அவர், ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்; இந்த அயோக்கியர்களுடன் நான் இனிமேலும் உறவாட விரும்பவில்லை என்று கூறி, ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தார்.

மேலும், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை என்பது வெறும் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும், அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் அதை நிச்சயம் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால் என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைதி ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதார தடைகளில் இருந்து ஈரானிய கச்சா எண்ணெய்க்கு தற்காலிக விலக்கு வழங்கிய அமெரிக்கா அதனை திரும்ப பெற்றுள்ளது. ஈரானின் அனுமதி இல்லாமல் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்க முடியாது என்றும் அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரானில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பஹ்ரைனிலும் அமெரிக்க படைகள் தங்கியுள்ள விமானத் தளத்தை குறிவைத்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான்மீது மீண்டும் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தகள் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கையெழுத்தான 60 நாட்களுக்கான தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் ஹார்மூஸ் பஞ்சாயத்தால் தற்போது அந்த ஒப்பந்தம் மீறப்பட்டு இருநாடுகளும் மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளன.

America - Iran
America - IranImg Credit: Chris Nallaratnam

மேலும் மீண்டும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வளைகுடா நாடுகளில் தற்போது மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பால், பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை 5.15% உயர்ந்து ஒரு பேரல் 77.98 டாலர் ஆகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 5.25% அதிகரித்து ஒரு பேரல் 74.14 டாலர் ஆகவும் விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அமைதிப் பேச்சுவார்த்தையை மறுத்தால்... ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை..!
Trump

அதுமட்டுமின்றி இந்த இருநாடுகளுக்கிடையே மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தால் இந்தியப் பங்குச்சந்தைகளும் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன.

வர்த்தக தொடக்கத்திலேயே சரிவுடன் காணப்பட்ட சந்தை, டிரம்பின் அறிவிப்பிற்கு பின் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,707.94 புள்ளிகள் சரிந்து 76,472.78 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 521.2 புள்ளிகள் வீழ்ந்து 23,877.50 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு நடந்து வரும் வேளையில், இந்த மோதல் வெடித்து மீண்டும் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அமெரிக்காவின் நாடகம் அம்பலம்: அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ஈரான் கடும் விமர்சனம்.!
Trump

தற்போது தான் உலக நாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள புதிய போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் உலக அரங்கில் எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com