

தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ரூ.3,360 வரை குறைந்தது. அதோபோல் வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 வரை குறைந்தது. இந்த விலை வீழ்ச்சி இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில், மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் அதிகரிக்கும் பட்சத்தில், அது தங்கத்தின் விலையின் மீது மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (செப்டம்பர் 2) தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ஒரு கிராம் ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.250-க்கு விற்பனையானது
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 3) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,320 உயர்ந்து, ரூ.1,13,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 2 நாட்களில் தங்கம் விலை சரிந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் தொடருமா அல்லது மீண்டும் விலை உயருமா என்பதே பலரின் கேள்வியாக இருக்திறது. இருப்பினும் விலை சரிந்தால் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்தால், நன்றாக இருக்கும் என இல்லத்தரசிகள் விரும்புகின்றனர்.
ஆனால் செப்டம்பர் மாத இறுதியில் விலை நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பது புரியாத புதிர் தான். தற்போது முகூர்த் நாட்கள் அதிகம் வருவதால், விலை உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600
செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.14,175 1 சவரன் ரூ.1,13,400
ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.14,370 1 சவரன் ரூ.1,14,960
ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040
ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.250
செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.250
ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.260
ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.260
ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.260
ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 3-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையானது. ஒரு வருடத்திற்கு முன்பு 2025 செப்டம்பர் 3-ல் ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது.
கடந்த கால விலை நிலவரங்களை இன்றைய விலையோடு ஒப்பிட்டால், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டின் பலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.