

செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை பெருமளவு சரிந்தது. ஆனால் அடுத்த 2 நாட்களில் மீண்டும் விலையேறியது. இதன்படி கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.2,280 வரை உயர்ந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலையை கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் செப்டம்பர் 16-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் மத்திய வங்கிகள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து தங்த்தின் விலையில் மாற்றம் இருக்கும் என பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்கா - ஈரான் இடையே போர்த் தாக்குதல்கள் தீவிரமடையும் சூழலில், அது தங்கத்தின் விலையின் மீது மிகப்பெரும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (செப்டம்பர் 4) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.255-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 5) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,360 குறைந்து, ரூ.1,13,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறி மாறி விற்பனையாகிறது. விலையில் நிலைத்தன்மை இல்லாததால், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமான மனநிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தின் மீதான இந்த மாற்றம் இந்திய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
செப்டம்பர் 4: 1 கிராம் - ரூ.14,360 1 சவரன் ரூ.1,14,880
செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920
செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600
செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.14,175 1 சவரன் ரூ.1,13,400
ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.14,370 1 சவரன் ரூ.1,14,960
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.255
செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.255
செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.250
செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.250
ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.260
ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 5-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையானது.
ஒரு வருடத்திற்கு முன்பு 2025 செப்டம்பர் 5-ல் ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.136-க்கு விற்பனையானது.
கடந்த கால விலை நிலவரங்களை இன்றைய விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.