சற்றுமுன் வந்த குட் நியூஸ்.. சவரனுக்கு ரூ.480 சரிவு! நகை வாங்க சரியான நேரமா இது.?

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
Gold price
Gold Price
Updated on

செப்டம்பர் மாத முதல் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், ஒரு சவரனுக்கு ரூ.2,520 வரை குறைந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலையை கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்களில் அமெரிக்காவில் மத்திய வங்கிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் இருக்கும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்த் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால், தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 6) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனையது. இதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து, ரூ.1,13,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்திற்கு கீழே வரும் என்ற நம்பிக்கை குறைந்து விட்டது. இனி தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் தங்கத்தின் மீதான வரியைக் குறைத்தால், ஓரளவு விலை குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
முதலீட்டை விட முதலீடு செய்யும் நேரம் தான் முக்கியம்! ஏன் தெரியுமா?
Gold price
தங்கம் விலை
Gold Price Today

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

செப்டம்பர் 6: 1 கிராம் - ரூ.14,190 1 சவரன் ரூ.1,13,520

செப்டம்பர் 5: 1 கிராம் - ரூ.14,190 1 சவரன் ரூ.1,13,520

செப்டம்பர் 4: 1 கிராம் - ரூ.14,360 1 சவரன் ரூ.1,14,880

செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920

செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

செப்டம்பர் 6: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 5: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 4: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.250

ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 7-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது. ஒரு வருடத்திற்கு முன்பு 2025 செப்டம்பர் 7-ல் ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.138-க்கு விற்பனையானது.

2025-ல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. ஆனால், 2026-ல் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ காணவில்லை. ஒருநாள் ஏறினால், மறுநாள் குறைகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதே கடினம் தான். இருப்பினும் இன்று வரையிலும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு பாதுகாப்பான முதலீடாகவே கருதப்படுகிறது

இதையும் படியுங்கள்:
கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?
Gold price
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com