மக்களே உஷார்..! உயிரை குடிக்கும் ஷிகெல்லா தொற்று: அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்!

ஷிகெல்லா நோய் என்றால் என்ன? அந்த நோய் வரக்காரணம், அறிகுறிகள் மற்றும் தற்காப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...
ஷிகெல்லா பாக்டீரியா
ஷிகெல்லா பாக்டீரியாAI Image
Updated on

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் கண்ணூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஷிகெல்லா வைரஸ் வேகமாக பரவியதால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த தொற்று அதிகமாக கோழிக்கோடு மாவட்டத்தில் தான் பரவி வந்துள்ளது. இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 68 பேருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கேரளா மாநிலம் முழுவதும் இதுவரை 4 பேர் ஷிகெல்லா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கேரளா முழுவதும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் தீவிரமாக பரவி வரும் ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று, அண்டை மாநிலமான தமிழகத்தில் இதுவரை பெரிய அளவில் கண்டறியப்படவில்லை என்றாலும் தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் தீவிர மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நோய் பரவலைத் தடுக்க தமிழக எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஷிகெல்லா நோய் என்றால் என்ன? அந்த நோய் வரக்காரணம், அறிகுறிகள் மற்றும் தற்காப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...

ஷிகெல்லா வைரஸ் (Shigella) என்பது ஷிகெல்லோசிஸ் (Shigellosis) எனப்படும் மனிதர்களின் குடலில் நோய்த்தொற்றை உண்டாக்கும் எளிதில் பரவக்கூடிய ஒரு வகை ஆபத்தான பாக்டீரியா தொற்று ஆகும். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்தாலும் இந்த நோய் எளிதில் தொற்றிவிடும். பெரும்பாலும் கோடை காலம் மற்றும் கோடை காலத்திற்கும்இ குளிர் காலத்திற்கும் இடைப்பட்ட பருவமான இலையுதில் காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக பரவும்.

எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடும் என்றாலும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் மலத்தில் கிருமி வெளியேற்றப்படுவதால் தீவிர வயிற்றுப்போக்குக்கு ஆளாகுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு கைகளை ‘ஹேண்ட் வாஷ்’ கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சானிடைசரும் பயன்படுத்தலாம்.

ஏராளமான திரவங்களை அருந்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதே முக்கியமானது. நோயின் கால அளவை குறைப்பதற்கும், பாக்டீரியா பரவுவதை கட்டுக்கடுததுவதற்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

கிருமித்தொற்று ஏற்பட்ட ஒன்று முதல் ஏழு நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தோன்றும்.

அறிகுறிகள் :

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்ட முதல் 2 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.

சுகாதரமற்ற உணவு, குடிநீர் மூலம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஷிகெல்லா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அல்லது கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

ஷிகெல்லா பாக்டீரியா
ஷிகெல்லா பாக்டீரியாAI Image

அதிக காய்ச்சல், வயிற்றுப்பிடிப்பு மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல் அல்லது சளியுடன் கூடிய மலம் வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் காணப்படும்.

சிலருக்கு ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் கடுமையான தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி, தொடர்ந்து மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உண்டாகும்.

சிலருக்கு எந்த அறிகுறிகளும் வெளிப்படாமல் இருக்கலாம்.

அனைத்து வயதினருக்கும் இந்த பாதிப்பு ஏற்படக் கூடும் என்றாலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

எப்படி பரவுகிறது ?

ஷிகெல்லா நோயை உண்டாக்குவதற்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களே தேவைப்படுவதால் மிக எளிதாக பரவி விடுகிறது. நோய் பாதிப்புக்குள்ளான நபர் தயாரித்த உணவை கைகளை முறையாக சுத்தம் செய்யாமல் உண்பதன் மூலமோ அல்லது அவர் பயன்படுத்திய டம்ளரில் தண்ணீரை பருகுவதன் மூலமோ பரவக்கூடும்.

பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலமும் பரவக்கூடும்.

பாதிக்கப்பட்ட நபரின் மலக் கழிவுகள் படிந்த கைகள் மூலமாகவோ அல்லது அவர்களுடன் நெருக்கமாக பழகுவதாலோ எளிதாகப் பரவும்.

இதையும் படியுங்கள்:
மக்கள் ஷாக்..! உணவிலும் இளநீரிலும் கலந்த பாக்டீரியா! கேரளாவில் பரவும் ஷிகெல்லா தொற்று..!
ஷிகெல்லா பாக்டீரியா

பொதுவாக கடுமையான வயிற்றுக்போக்கு, வயிற்றுப்பிடிப்பு, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

தடுப்பு முறைகள் :

கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது சோப்பு போட்டு கைகளைத் தவறாமல் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

சுத்தமான, வேகவைத்த உணவை உட்கொள்ள வேண்டும். தண்ணீர் மற்றும் உணவை மூடி வைக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கினால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து மற்றும் நிறைய திரவங்கள், எலக்ட்ரோலைட் கரைசல்களை (ORS) அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்படாத நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உடல்நிலை சரியில்லாதபோது வீட்டிலேயே இருப்பதன் மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு நோய் பரப்புவதையும் தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நிபா வைரஸ்: அச்சம் தேவையா? உலக சுகாதார நிறுவனம் சொல்வதென்ன..?
ஷிகெல்லா பாக்டீரியா

அறிகுறிகள் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது பாக்டீரியாவின் தீவிரத்தைக் கண்டறிந்து மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com