
இந்தியத் தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தீவிரமாக மேற்கெண்டு வருகிறது. இதன்படி கிட்டத்தட்ட 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர் பட்டியலில் நீடிக்க பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்திருந்தது.
இதில் ஆதார் கார்டை அடையாள ஆவணமாக ஏவெளிமாநில வாக்காளர்கள்ற்க மறுத்த தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. இறுதியில் உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஆதார் கார்டை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பீகார் மக்கள் பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.
பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தற்போது இந்தியாவின் எந்த மாநிலத்தில் வசிக்கிறார்களோ அங்கேயே வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 6.5 லட்ச பீகார் வாசிகளுக்கு தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
பீகார் மட்டுமின்றி மற்ற வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இனி தமிழ்நாட்டில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரைப் போலவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் படி பார்த்தால், கிட்டத்தட்ட 70 லட்சம் வடமாநில வாக்காளர்கள் தமிழ்நாட்டில் புதிதாக இணைக்கப்படுவார்கள். இது பெரிய எண்ணிக்கை என்பதால் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல்களில் ஒரு பெரிய மாற்றம் வர வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆகையால் தான் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன. இத்தனை லட்சம் வெளிமாநில வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருப்பது, தமிழக மக்களுக்கே ஆச்சரியமாகத் தான் உள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, எந்தெந்த மாவட்டங்களில் வசிக்கிறார்கள் உள்ளிட்ட பல தகவல்களைத் திரட்ட தமிழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
வடமாநில வாக்காளர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் பட்சத்தில், இந்திய அரசியலமைப்பில் இதுவொரு புதிய அத்தியாயமாக கருதப்படும். அதோடு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும், வேறு மாநிலத்தவர்கள் எளிதாக வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்காக இனி சொந்த மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.