#BIG NEWS : இன்று கடைக்கு போறீங்களா? QR கோடு மூலம் பணம் அனுப்ப முடியாது – வணிகர் சங்கம் தகவல்!

இன்று தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை பயன்படுத்த முடியாது - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு
UPI கட்டணம்
UPI கட்டணம்AI Image
Updated on: 

ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை எம்பிஆர் கட்டணம் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்தது.இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

என்​பிசிஐ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ள​தாவது:

கடைகளில் பொருட்​கள் வாங்​கு​வது, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணப் பரி​மாற்​றம் செய்​வது எனப் பொது​மக்​களுக்​கான எந்​தவொரு பரி​வர்த்​தனைக்​கும் எவ்​வித கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது. அதேபோன்​று, நண்​பர்​கள் / உறவினர்​களுக்​குப் பணம் அனுப்​புதல் உள்​ளிட்ட தனி​நபர்​களுக்கு இடையி​லான (பி2பி) பணப் பரி​மாற்​றங்​கள், சுய கணக்​குப் பரி​மாற்​றங்​கள் ஆகியவை எவ்​வித வரம்​புமின்றி எப்​போதும் போல இலவச​மாகவே இருக்​கும்.மேலும், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் பயனர்களிடம் ‘பிளாட்​பார்ம் கட்​ட​ணம்’ எதை​யும் வசூலிக்க தடை விதிக்கப்​பட்​டுள்​ளது.

ரூ.2,000 வரை மேற்​கொள்​ளப்​படும் 95 சதவீதத்​துக்​கும் அதி​க​மான அன்​றாட சிறு வணி​கப் பரி​வர்த்​தனை​களுக்​குக் கட்​ட​ணம் எது​வும் கிடை​யாது. ஆனால், ரூ.2,000-க்கு மேற்​பட்ட வணி​கப் பரி​வர்த்​தனை​களுக்கு 0.4% கட்​ட​ணம் விதிக்​கப்​படும். ரூ.75,000 மற்​றும் அதற்கு மேற்​பட்ட பெரிய அளவி​லான பரி​வர்த்​தனை​களுக்கு அதி​கபட்ச​மாக ரூ.300 மட்​டுமே கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. வர்த்தகர்கள் இந்த கட்டணத்தை வங்கிகள், யுபிஐ சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும்.

ரயில்​வே, தொலைத்​தொடர்​பு, பெட்​ரோல் பங்க், காப்​பீட்டு பிரீமி​யம் மற்​றும் மின்​சா​ரம் / நீர் போன்ற பயன்​பாட்​டுக் கட்​ட​ணங்​களுக்கு (ரூ.2,000-க்கு மேல்) சதவீதத்​துக்​குப் பதிலாக ஒரு பரி​வர்த்​தனைக்கு ரூ.5 மட்​டுமே நிலை​யான கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​படும். மூலதனச் சந்தை சார்ந்த முதலீடு​களுக்கு 0.02% (அதி​கபட்ச வரம்பு ரூ.300) கட்​ட​ணம் பொருந்​தும்.மாதம் ரூ.1 லட்​சம் வரை யுபிஐ மூலம் கட்​ட​ணம் பெறும் சிறு வணி​கர்​கள் மற்​றும் சாலை​யோர வியா​பாரி​கள் (பி2பிஎம்) இந்த எம்​டிஆர் கட்​ட​ணத்​தில் இருந்து முழு​மை​யாக விலக்கு பெறுகின்​ற​னர். மேலும், கிரா​மப்​புற மற்​றும் சிறு நகரங்​களில் டிஜிட்​டல் பரி​வர்த்​தனை​களை ஊக்​குவிக்க பிரத்​யேக நிதி​யம் அமைக்​கப்பட உள்​ளது.

யுபிஐ உள்​கட்​டமைப்​பைப் பரா​மரிக்​க​வும், சைபர் பாது​காப்பு மற்​றும் டிஜிட்​டல் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்​த​வும் ஆண்​டுக்கு சுமார் ரூ.20,000 கோடி செல​வாகிறது. இதற்​கான நிதித் தேவையைப் பூர்த்தி செய்​ய​வும், வங்கி மற்​றும் நிதிச் சேவை அமைப்​பு​களின் சேவையை மேலும் வலுப்​படுத்​தவுமே இந்த வணிக ரீதியி​லான கட்டண முறை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு என்​பிசிஐ தெரி​வித்​துள்​ளது.

Gpay
Gpay

இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதியான இன்று காந்தி ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை நிறுத்தப்படும்' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் வணிகர் விரோதப் போக்கை கண்டித்து, அக்.7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இப்பேரவை அறிவித்துள்ளது.

அகில இந்திய வியாபாரிகள் சங்க கோரிக்கையைத் தொடர்ந்து, அந்த போராட்டத்துக்கு முன்னோட்டமாகவும், வணிகர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை மத்திய அரசுக்கு அறவழியில் உணர்த்தும் வகையிலும் இப்பேரவை முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அந்நியப் பொருட்களையும், அநீதியான வரிகளையும் எதிர்த்து அறவழியில் போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும், தங்கள் கடைகளில் உள்ள அனைத்து வகையான யுபிஐ, கியூஆர் கோடு பணப் பரிவர்த்தனைகளையும் ஒருநாள் முழுவதும் நிறுத்தி, ரொக்கப் பண பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது"

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நீங்களும் UPI பயன்படுத்துகிறீர்களா..?இதற்கெல்லாம் ஒரு பைசா கூட கட்டணம் இல்லை..!
UPI கட்டணம்
logo
Kalki Online
kalkionline.com