நீங்களும் UPI பயன்படுத்துகிறீர்களா..?இதற்கெல்லாம் ஒரு பைசா கூட கட்டணம் இல்லை..!

ஒவ்வொரு முறையும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அர்த்தம் இல்லை.
UPI கட்டணம்
UPI கட்டணம்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இந்தியாவில் வரும் அக்டோபர் 15 முதல் குறிப்பிட்ட யுபிஐ (UPI) வணிகப் பரிவர்த்தனைகளுக்குப் புதிய வணிகர் தள்ளுபடி கட்டண (MDR - Merchant Discount Rate) விதிமுறை அமலுக்கு வர உள்ளது.

ஆனால், இதனால் ஒவ்வொரு முறையும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்களிடம் கட்டணம் (யுபிஐ கட்டணம்) வசூலிக்கப்படும் என்று அர்த்தம் இல்லை. வழக்கமான பல யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.

யாருக்குக் கட்டணம் இல்லை? (எவை இலவசம்?)

* வணிகர்களுக்கு (Person-to-Merchant - P2M) நேரடியாக வங்கிச் கணக்கிலிருந்து செய்யப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். இந்த 0.4% கட்டணமானது, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு).

* ரெயில் டிக்கெட்டுகள், எரிபொருள் (Fuel), தொலைத்தொடர்பு (Telecom), காப்பீடு (Insurance) மற்றும் விவசாயக் கருவிகள் வாங்குதல் போன்ற தொடர்ச்சியான பணம் செலுத்தும் சேவைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், சதவீதம் கணக்கிடப்படாமல் நிலையாக ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

* இந்த விதிமுறை மாற்றத்தால் பொதுமக்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. நீங்கள் எப்போதும் போல QR கோடை ஸ்கேன் செய்து இலவசமாகப் பணம் அனுப்பலாம்.

* யுபிஐ மூலம் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்புவது நபருக்கு நபர் பணப் பரிமாற்றம் (P2P) எனப்படுகிறது. அதன்படி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு நீங்கள் அனுப்பும் பணப்பரிவர்த்தனைக்கு (எவ்வளவு தொகையாக இருந்தாலும்) எந்தக் கட்டணமும் கிடையாது.

* யுபிஐ மூலம் வணிக நிறுவனங்களிடம் செய்யப்படும் ரூ.2,000 வரையிலான சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் இல்லை. உதாரணமாக, நீங்கள் ஒரு கடைக்கு சென்று ரூ.800 மதிப்புள்ள பொருட்களை வாங்கி விட்டு யுபிஐ மூலம் பணம் செலுத்தினால், அந்தப் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர் MDR கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

* வழக்கமான பெரிய அல்லது தரநிலை வணிகர்களிடம் ரூ.2,000-க்கும் அதிகமாக யுபிஐ மூலம் பணம் செலுத்தும் சில பரிவர்த்தனைகளுக்கு MDR பொருந்தலாம். ஆனால் இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய அவசியமில்லை. MDR கட்டணத்தை வணிக நிறுவனமே ஏற்க வேண்டும்.

* மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் வருவாய் பெறும் சிறிய வணிகர்களுக்கு (Small Merchants) இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தெருவோர வியாபாரிகள், சிறு கடைகள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் யுபிஐ கியூஆர் குறியீடு மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறும் பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட (P2PM) வகையின் கீழ் தொடர்ந்து பூஜ்ஜிய MDR கட்டணத்திலேயே இருக்கும்.

* மாதாந்திர சந்தா, மின்சாரக் கட்டணம் போன்ற தொடர்ச்சியான பணம் செலுத்துதல்களுக்கு பயன்படுத்தப்படும் யுபிஐ ஆட்டோபே சேவையை அமைப்பதற்கும் MDR கட்டணம் இல்லை.

யுபிஐ கட்டணம்
யுபிஐ கட்டணம்

* எனவே, தனிநபர்கள் யுபிஐயை தொடர்ந்து வரம்பற்ற முறையில் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

* மருத்துவம், கல்வி நிறுவனங்கள், மூலதனச் சந்தைகள் மற்றும் காப்பீடு, வரி செலுத்துதல் மற்றும் ஐபிஓ போன்ற குறிப்பிட்ட சரிபார்க்கப்பட்ட வகைகளுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை பரிவர்த்தனை வரம்புகள் பொருந்தும்.

* தினசரி குறைந்த மதிப்புள்ள செலவுகளுக்கு, பின் (PIN) தேவையில்லாத யுபிஐ லைட்டைப் பயன்படுத்தலாம்; இதன் ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ. 1,000 மற்றும் கணக்கில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.5,000 ஆகும்.

இந்த அதிகபட்ச வரம்புகள் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொதுவானதல்ல. குறிப்பிட்ட துறை, வங்கி மற்றும் பரிவர்த்தனை வகைக்கு ஏற்ப வரம்பு மாறுபடலாம்.

இதையும் படியுங்கள்:
இன்டர்நெட் வேண்டாம்... ஸ்மார்ட்போனும் வேண்டாம்! ₹2,000 வரை யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்!
UPI கட்டணம்

முக்கியமாக இந்த MDR கட்டணத்தை வங்கிகளும், பேமெண்ட் நிறுவனங்களும் வணிகர்களிடம் (Merchants) இருந்து மட்டுமே வசூலிக்க வேண்டும், வாடிக்கையாளர்களிடம் இதனை வசூலிக்கக் கூடாது என்று நிதி அமைச்சகம் மற்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதனை வணிகர்கள் வாடிக்கையாளர்கள் மீது திணிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க அக்டோபர் 15 முதல் தினமும் பிரத்யேகக் கண்காணிப்பு நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

எனவே, வழக்கமான யுபிஐ பயன்பாடு தொடர்ந்து இலவசமாக இருக்கும். புதிய MDR விதிமுறை முக்கியமாக குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டண முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க அரசு தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் பரிவர்த்தனை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியா!
UPI கட்டணம்

சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மறுபுறம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மக்களிடம் அரசு கட்டணம் வசூலிக்கப் போகிறது என்ற செய்தியும் பரவியது. ஆனால் பொதுமக்களை பாதிக்கும் வகையில் எந்தவொரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com