குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதி... சிங்கப்பூர் அரசின் புது திட்டம்..!

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதி!: பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி - தமிழ்நாட்டிற்கு பாடம் என்ன?
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு
Updated on

சிங்கப்பூர் அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்ததிலிருந்து 17 வயது வரை சுமார் ரூ.53 லட்சம் முதல் ரூ.55 லட்சம் (சுமார் 70,000 சிங்கப்பூர் டாலர்) வரை நேரடி நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் கருத்தரிப்பு விகிதம் (Fertility Rate) வரலாறு காணாத வகையில் 0.87 ஆகக் குறைந்ததன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திக் குறிப்புகள் கூறுகிறது.

சிங்கப்பூரின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate )(TFR) 2025-ல் வெறும் 0.87 குழந்தைகள்/பெண் ஆகக் குறைந்துள்ளது. 2024-ல் இது 0.97. அதாவது, சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைக்கும் குறைவாகவே உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மக்கள்தொகையை வரும் காலங்களில் நிலையாக வைத்திருக்க பொதுவாகக் குறிப்பிடப்படும் மாற்று நிலை (replacement level) 2.1. ஆனால் சிங்கப்பூரின் 0.87 என்பது அதைவிட மிகக் குறைவு.

இதனால்தான் சிங்கப்பூர் 2026-ல் (Baby Bonus + Large Families ) குழந்தைக்கான ஊக்கத்தொகை + பெரிய குடும்பங்கள் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த குழந்தை பிறப்பினால் சிங்கப்பூர் சந்திக்கும் பிரச்சினை என்ன?

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் அடுத்த 20–30 ஆண்டுகளில் வேலை செய்யும் வயதினரின் எண்ணிக்கை குறையும். முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி, வரி வருவாய், முதியோர் பராமரிப்பு மற்றும் குடும்பப் பொறுப்பு ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படும் போன்ற எதிர்கால பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிங்கப்பூர் அரசு, தற்போதைய போக்கு தொடர்ந்தால் குடிமக்கள் எண்ணிக்கை 2040களின் தொடக்கத்தில் குறையத் தொடங்கலாம் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதிப்புகளை சீர் செய்யவே சிங்கப்பூர் அரசு தொலைநோக்கு பார்வையுடன் குழந்தைகள் போனஸ், பெற்றோர் விடுப்பு, வீட்டு வசதி மற்றும் குழந்தை வளர்ப்பு ஆதரவு போன்ற பல சலுகைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் பணம் மட்டும் கொடுத்தால் பிறப்பு விகிதம் உடனடியாக உயராது என்பதையும் புரிந்து வீடு , குழந்தை வளர்ப்பு , தகுந்த வேலை நேரம் , பெற்றோர் விடுப்பு ,குழந்தை வளர்ப்புச் செலவு ,திருமண வயது ஆகிய அனைத்து பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் அணுக வேண்டிய விஷயமாக சிங்கப்பூர் எண்ணுகிறது.

இதனாலேயே இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது எனலாம். சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறந்தது முதலே அரசு இதற்கான நிதியை வழங்கும் விதமாக அதிகபட்சம் S$62,000 வரை ஆதரவு வழங்கும் புதிய SG Child Support Package-ஐ அறிவித்துள்ளது.

Baby eating foods
Baby eating foods

நிதி வழங்கப்படும் விதம் :

  • S$10,000 — 'பேபி கிஃப்ட்' (Baby Gift) எனும் பணப்பரிசு; குழந்தையின் முதல் ஆண்டில் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.

  • S$32,000 — 1 வயது முதல் 16 வயது வரை ஆண்டுதோறும் S$2,000 வீதம் வழங்கப்படும்.

  • S$5,000 — குழந்தையின் CDA (குழந்தை மேம்பாட்டுக் கணக்கு) கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • S$5,000 வரை — பெற்றோர்கள் CDA கணக்கில் சேமிக்கும் தொகைக்கு இணையான தொகையை (டாலருக்கு டாலர் அடிப்படையில்) அரசு வழங்கும்.

  • S$10,000 — குழந்தைக்கு 17 வயது பூர்த்தியாகும்போது, ​​அவர்களின் கல்விக்கான கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • S$5,000 — பிறப்பின்போது வழங்கப்படும் 'மெடிசேவ்' (MediSave) மானியம்.

  • S$2,500 — பள்ளிப் பருவத்தில் வழங்கப்படும் கல்வி நிதிக்கான 'எடுசேவ்' (Edusave) பங்களிப்புகள் என குறிப்புகளிலிருந்து அறிகிறோம்.

மேலும், முழு நாள் குழந்தை பராமரிப்புச் சலுகைகளும் பெற்றோருக்கான விடுப்புகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி நமது இந்தியாவில் எப்படி?

இந்தியாவின் TFR, NFHS-5 (2019–21) படி 2.0. இது replacement level 2.1-ஐ ஏற்கனவே சற்று கீழே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சிங்கப்பூர் போன்ற திட்டம் வந்தால் குழந்தை பெறும் முடிவை சில குடும்பங்கள் எடுக்கலாம்.

திருமணம் → குழந்தை பெறுதல் ஆகியவற்றை தள்ளிப்போடும் சில நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி ஊக்கமாக இருக்கலாம்.

ஆனால் பணம் மட்டும் கொடுத்தால் TFR உடனடியாக 2.1-க்கு செல்லும் என்று கூற முடியாது என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

.

தமிழ்நாட்டின் சமீபத்திய SRS தரவுகளில் TFR இன்னும் குறைவாக, சுமார் 1.4 எனவும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே

தமிழ்நாடு நீண்டகாலமாக குறைந்த பிறப்பு விகிதத்தை சந்தித்து வருகிறது. அதனால் சமீபத்தில் தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக (365 நாட்களாக) உயர்த்தப்பட்டு உள்ளது .'மூன்றாவது குழந்தை பெற்றால் விடுப்பு அதிகம் என்ற திட்டம் எல்லா குடும்பங்களுக்கும் ஏற்றதல்ல. முதல் குழந்தைக்குப் பின் இரண்டாவது குழந்தையை

என்பதைத் தள்ளிப்போடும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் திட்டம் இருந்தால் அதிக பயன் இருக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர்.

சிங்கப்பூரின் குழந்தைக்கான நிதியுதவி இங்கும் அரசு தந்தால் நாங்களும் குழந்தை பெற தயார் என்று சொல்லும் பெண்களும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்திலும் அதிக குழந்தைகள் பெற ஊக்கத்தொகையா? அமைச்சர் அறிவிப்பு..!
குழந்தை வளர்ப்பு
logo
Kalki Online
kalkionline.com