முயற்சி + பயிற்சி = வெற்றி: பைக் சாகசத்தில் அசத்திய 'சிங்கப்பெண்'... வியந்து ரசித்த முதல்வர் விஜய்!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகத் தமிழக அரசின் புதிய முயற்சி; பிரத்யேக சீருடை & நவீன ரோந்து வாகனங்கள் அறிமுகம்!
சிங்கப்பெண் சிறப்புப் படை
சிங்கப்பெண் சிறப்புப் படைsource:twitter
Updated on

பெண்களால் முடியாது என்ற பழமையான கருத்துகளை முறியடித்து இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகின்றனர்..கல்வி அறிவியல், விளையாட்டு மற்றும் பாதுகாப்பு படை உள்ளிட்ட துறைகளில் அவர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் நடைபெற்ற " சிங்கப்பெண்" சிறப்புப் படையின் தொடக்க விழா அமைந்தது ‌.

தமிழக அரசால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட " சிங்கப் பெண் ' சிறப்பு படையின் தொடக்க நிகழ்ச்சியில், சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் தங்களது திறமையை கண்கவர் நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தினர்.. அவற்றில் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தது பைக் சாகச நிகழ்ச்சி..

வேகமாக செலுத்துவது மட்டுமே சாகசம் அல்ல.. வாகனத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு , சமநிலை, ஒருங்கிணைப்பு, ஒழுக்கம் மற்றும் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான பயிற்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெளிப்பாடே இந்த நிகழ்ச்சி என்பதை அந்தக் காட்சிகள் தெளிவாக உணர்த்தின

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த நிகழ்ச்சி பெண்களின் திறமையை பலரும் பாராட்டும் வகையில் அமைந்தது .." சிங்கப்பெண் " சிறப்பு படையின் நோக்கம் வெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்ல.. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாகப் பதிலளித்தல் பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்துதல் தேவையான இடங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய பொறுப்புகளையும் இந்த படை ஏற்கிறது..

இந்த நிகழ்ச்சி பெண் காவலர்களின் உடல் வலிமையை மட்டும் அல்லாது அவர்களின் மன உறுதி , ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது.. இத்தகைய காட்சிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறையில் சாதிக்கலாம் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை..

சமூகத்தின் பாதுகாப்பில் பெண்கள் இன்று முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.." சிங்க பெண் ' சிறப்புப் படையின் பைக் சாகசம் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல அது பெண்களின் தன்னம்பிக்கை துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலை நிறுத்தப்படுகிறது..

இத்தகைய நிகழ்வுகள் பெண்கள் பாதுகாப்பு படையில் சேரும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசின் பயிற்சி திட்டங்கள் அவர்களின் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

பெண் காவலர்கள் இவ்வாறு சிறப்புப் பயிற்சி பெற்று அதிரடிப் பணிகளில் ஈடுபடுவது காவல் துறையின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது.. உடல் தகுதி மட்டும் அல்லாமல் மன உறுதி,துரித முடிவெடுக்கும் திறன்,குழு ஒருங்கிணைப்பு,அவசர நிலைகளை சமாளிக்கும் திறன் ஆகியவற்றிலும் அவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுகின்றனர்..

இத்தகைய பயிற்சிகளே சவாலான சூழல்களிலும் தன்னம்பிக்கையுடன் செயல் பட அவர்களுக்கு உதவுகின்றன..சமீப காலங்களில் பெண்கள் விமானம் ஓட்டுதல், விண்வெளி ஆய்வு, எல்லைப் பாதுகாப்புப் பணி, தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புப் பணிகள் என பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர்..

அந்த வரிசையில் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் பைக் சாகசத்தின் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருப்பது பெண்களின் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது..இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் பெண்களைப் பற்றிய நேர்மறை எண்ணங்களை வலுப்படுத்தவதோடு இளம் தலைமுறையினருக்கு " முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம்" என்ற தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன..

சிங்கப் பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக சீருடை மற்றும் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் சூழல்களில் விரைவாகச் செயல்படுவதற்கும் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்துதவதற்கும் இந்த படை உருவாக்கப்பட்டு உள்ளது.. நவீன பயிற்சி மற்றும் ஒழுங்கு முறையுடன் செயல்படும் இந்த முயற்சி தமிழகக் காவல் துறையில் பெண்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவல் துறை பதக்க வழங்கும் விழா நடைபெற்றது.விழாவின் ஒரு பகுதியாகக் காவல்துறையினரின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இந்நிலையில், பெண் காவலர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மூலம் நெருப்பு வளையத்திற்குள் பாய்ந்து அதிரடி சாகசங்களைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்

இதையும் படியுங்கள்:
காக்கிச் சட்டைக்குள்ளும் கனிவிருக்கும்!
சிங்கப்பெண் சிறப்புப் படை
இதையும் படியுங்கள்:
அதிக பெண் காவலர்கள்! குறையும் குற்றங்கள்!
சிங்கப்பெண் சிறப்புப் படை
logo
Kalki Online
kalkionline.com