ஒரே நாளில் 50 செ.மீ மழை! எல் நினோவால வரப்போகும் பெரும் ஆபத்து!

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழையில் கொட்டப்போகும் அதிகபட்ச மழை குறித்து வானிலை எச்சரிக்கை!
Heavy Rainfall
Heavy Rainfall
Updated on: 

எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் இயல்பைவிட 60 செ.மீ அதிக மழை பெய்யலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். அதேபோல் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்ட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 20-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை தீவிரமாக இருக்கும். இதில் நவம்பர் மாதம் பிரதான மழை மாதமாக அமையும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 50 முதல் 60 செ.மீ. வரை மழை பதிவாகக்கூடும்.சூப்பர் எல்நினோ மற்றும் நேர்மறை வானிலை நிகழ்வுகள் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த இருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதிகமழைக்கும், குறுகியநேரத்தில் அதிக மழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடலில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால், வளிமண்டலத்தில் ஈரப்பதம் 7 சதவீதம் அதிகரிக்கும். அதுவே சூப்பர் எல்நினோவின் உச்சத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அதிகரித்தால், வளிமண்டலத்தில் ஈரப்பதம் 28 சதவீதம் இயல்பைவிட கூடும். இந்த நிகழ்வே அதிகமழையை கொடுக்க இருக்கிறது.

சூப்பர் எல்நினோவின் முதற்கட்ட தாக்கம் மழைப்பொழிவு குறைவு, வறட்சி என்ற நிலையில் இருந்தது. இந்த நிலை அக்டோபர் 15-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை இல்லாத வகையில், கடல் பரப்பின் வெப்பநிலை இயல்பைவிட 3.04 டிகிரி செல்சியஸ் என்ற அளவை கடந்து இருக்கிறது. இது 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவு வரை செல்ல உள்ளது. சூப்பர் எல்நினோ வரலாற்றில் இதுவரை இல்லாத கடல் பரப்பு வெப்பநிலை இது ஆகும். 150 ஆண்டுகளுக்கு முன்பு 3 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முதற்கட்டம் அடுத்த மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்ததாக சூப்பர் எல்நினோவின் 2-ம் கட்ட தாக்கம், வடகிழக்கு பருவமழையில் அதிக மழையை கொடுக்க இருக்கிறது"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Heavy Rainfall
Heavy Rainfall

தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டு ஓரளவு நன்றாகவே தமிழ்நாட்டிற்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நீர் வழங்கும் மேட்டூர் அணையே நிரம்பவில்லை. அந்த பக்கம் வைகையும் நிரம்பவில்லை.. ஏன் வற்றாத நதியான தாமிரபரணியும் போதிய மழை இல்லாமல் வற்றிப்போய்கிடக்கிறது.

சென்னை பொறுத்தவரையில் எந்த ஏரியும் குடிநீருக்கு தண்ணீர் வரத்து போதிய அளவு இல்லை.. கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை மெல்ல மெல்ல விலக தொடங்கிவிட்டது.

இதையும் படியுங்கள்:
ஏற்கனவே சொத்து தகராறு... இப்போது ரூ.46 கோடி செக் மோசடி! அம்பிகா மீது ராதா அதிர்ச்சி புகார்.!​
Heavy Rainfall
logo
Kalki Online
kalkionline.com