ஏற்கனவே சொத்து தகராறு... இப்போது ரூ.46 கோடி செக் மோசடி! அம்பிகா மீது ராதா அதிர்ச்சி புகார்.!​

கண்ணீரா? சதியா? ரூ. 46 கோடி செக் மோசடி வழக்கில் போலீசை நாடிய நடிகை ராதா!
அம்பிகா - ராதா
அம்பிகா - ராதா
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ் சினிமாவில் 80,90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை அம்பிகா மற்றும் ராதா. அம்பிகாவுக்கும் இவரது தங்கையான ராதாவிற்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருக்கும் சூழலில், தற்போது 46 கோடி ரூபாய்க்கு காசோலை மோசடி செய்ததாக மூத்த சகோதரி அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.

நடிகை ராதா, வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் சென்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் புகார் கொடுத்துள்ளார். இவர் புகார் கொடுக்க சென்ற காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்:
கேரளா நிலச்சரிவு: சென்னை பெண் உள்பட 9 பேர் பலி; பதற வைக்கும் காட்சி..!
அம்பிகா - ராதா

நடிகை ராதாவுக்கு சொந்தமான 5 காசோலைகளில் சுமார் 46 கோடி ரூபாயை மோசடி செய்ததாகக் கூறி மூத்த சகோதரி அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே வீட்டில் வசித்திருந்த போது, தனது 5 காசோலைகளை நடிகை அம்பிகா எடுத்து மோசடி செய்துள்ளார். வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்க்கும் போது தான், இந்த மோசடி தனக்கு தெரிய வந்ததாகவும் நடிகை ராதா அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகை அம்பிகா மற்றும் ராதாவக்கு இடையே வளசரவாக்கத்தில் ஏஜிஎஸ் கார்டன் சொத்து வழக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த காசோலை மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
காலையிலேயே பரபரப்பு.!! பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு: DPI-யின் டிஜிட்டல் மூவ்.!
அம்பிகா - ராதா

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில்,

சென்னை போரூரில் ARS கார்டன் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறேன். . தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் சமயங்களில், அவசர பயன்பாட்டிற்காக தனது கையொப்பமிட்ட சில காசோலைகளை (Cheques) வீட்டில் உள்ள தனது அறையில் வைத்திருப்பது வழக்கமாகும்.

இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு 'ARS கார்டன்' என்ற பெயர் 'RR கார்டன்' என மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்துத் தனது ஐடிபிஐ (IDBI) வங்கிக் கணக்கிற்கும் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு, புதிய காசோலை புத்தகமும் பெறப்பட்டது. இதனால் பழைய காசோலை புத்தகம் பயன்பாட்டில் இல்லாமல் போயிருந்தது.

கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி நடிகை ராதாவின் மின்னஞ்சலுக்கு (E-mail) வங்கியிலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில், பயன்பாட்டில் இல்லாத அவரின் பழைய 5 காசோலைகளை பயன்படுத்தி, சுமார் ரூ.46 கோடி பணத்தை அக்கா அம்பிகாவின் பெயரில் மாற்றுவதற்காக வங்கியில் செலுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கண்டு பேரதிர்ச்சியடைந்தேன். உடனடியாக அந்த பண பரிவர்த்தனையை நிறுத்துமாறு வங்கிக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இதுகுறித்து அவர் விசாரித்தபோது, அந்த 5 காசோலைகளையும் பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பித்தது அவரது சகோதரர் மல்லிகார்ஜூனா குஞ்சன் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே 'பெமா' (FEMA) வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள எனது வீட்டின் தரைத்தளத்தில் அக்கா அம்பிகா வசித்து வருகிறார். நான் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, மேல் தளத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் சட்டவிரோதமாக சென்று, பயன்பாட்டில் இல்லாத பழைய காசோலைகளை திருடி, ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

தன் வீட்டின் பூட்டைத் உடைத்து/உள்ளே புகுந்து மோசடியில் ஈடுபட்ட அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜூனா மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ராதா தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இப்புகார் குறித்து சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டு விட்டதால், முதல் கட்டமாக இருதரப்பையும் நேரில் அழைத்து ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும். அதன் பிறகே அடுத்த கட்ட விசாரணை அல்லது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வது குறித்து காவல் துறை முடிவெடுக்கும்.

logo
Kalki Online
kalkionline.com