ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஸ்மார்ட்போன் விலை குறைய போகுது?

புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்கள் அடுத்த மாதம் வரை தள்ளிப்போடுவது நல்லது.
ஸ்மார்ட்போன் விலை
ஸ்மார்ட்போன் விலைimage credit-gadgets.beebom.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

புதுசா ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கீங்களா. தயது செய்து இப்போ வாங்காதீங்க. ஏன்னா அடுத்த மாதம் (அக்டோபர்) ஸ்மார்ட்போன் விலை கண்டிப்பாக குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த மாதம் வரை தள்ளிப்போடுவது நல்லது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் சந்தை என்பதால் தான் பல நிறுவனங்களும் போட்டிபோட்டு கொண்டு தங்களின் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. ஆனால் சமீபகாலமாக ஸ்மார்ட்போன் சந்தை மந்த மடைந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் போன் விலை ஏற்றம். ஸ்மார்ட் போன் உற்பத்திக்கான உபகரணங்கள் விலை உயர்ந்துள்ளதால் போன்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மார்ட் போன்களின் உற்பத்தி செலவு அதிகமாகி விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் சானிய மக்களால் புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லை. கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் (Counterpoint Research) மற்றும் ஐடிசி (ITC) போன்ற நிறுவனங்களின் தரவுகளின்படி, நடப்பாண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விநியோகம் ஆண்டு அடிப்படையில் 10% முதல் 11% வரை சரிவை கண்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் மொபைல் போன்கள் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிக்க எதிர்வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் 62,500 கோடி மதிப்பிலான மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

அரசின் இந்த லட்சிய இலக்குகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது செல்போன்களுக்கு அரசு 18% வரி விதிக்கிறது.

GST rate
GST rate

இந்த ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 5% ஆக குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்தால் செல்போன்களின் விலை குறைந்து செல்போன்கள் விற்பனை பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளை பெருமளவில் மாற்றி அமைத்தது. இதனை அடுத்து பல்வேறு பொருட்களின் விலைவாசி குறைந்தது. எனவே இதனை அடிப்படையாக கொண்டு தான், செல்போன்கள் மீதான வரியையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சூழலில், டெல்லியில் வரும் செப்டம்பர் 12-ம்தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-ஆவது கூட்டம் அக்டேபர் 7-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அமேசானில் 70 சதவீத அதிரடி ஆஃபர்... அட்டகாசமான ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்!
ஸ்மார்ட்போன் விலை

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சா்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் முந்தைய கூட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர்.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்போது, ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில், மாதம்தோறும் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாக பரிமாற்றம் செய்யும் வணிக நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவை எளிதாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தான் ஸ்மார்ட் போனுக்கான ஜிஎஸ்டியை குறைக்க போறாங்களா இல்லையா என்று தெரியவரும். அதேசமயம் ரூ.25,000 பட்ஜெட்டிற்குள் இருக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களுக்கு மட்டும் தான் ஜிஎஸ்டி குறைக்க போவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: தேசிய தீர்ப்பாயம் ரெடி! ஆனால், சாமானிய மக்களுக்கு என்ன கிடைக்கும்?
ஸ்மார்ட்போன் விலை

எதுவாக இருந்தாலும், அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகே விவரம் தெரியவரும். அதனால், புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் அதை அடுத்த மாதம் வரை தள்ளிப்போடுவது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com