

ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபியைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 26) சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றைய விடுமுறைக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 27) சட்டசபை மீண்டும் தொடங்கியது.
இன்றைய சட்டசபையில் சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியில் இருந்து துறை ரீதியான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினத்திலிருந்து கேள்விக்கான நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சமூக நீதித் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது அமைச்சர் வன்னியரசு இன்று பதில் அளிப்பதைக் காண விசிக தலைவர் திருமாவளவன் பார்வையாளராக வருகை தந்துள்ளார்.
சட்டசபை தொடங்கியதும் எம்எல்ஏ-க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
ஆதிதிராவிடர் நலத் துறை சார்ந்த 67 அறிவிப்புகளை அறிவித்தார் அமைச்சர் வன்னி அரசு. விசிக-வை சேர்ந்த எம்எல்ஏ மானிய கோரிக்கையை தாக்கல் செய்வது இதுவே முதல்முறை.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் 100 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
* பள்ளிகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பராமரிப்புத் தொகை உயர்த்தப்படும்.
* 100 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்படும். தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும்.
* மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும்.
* ஆதிதிராவிட பெண்களுக்கு விடிவெள்ளி வாழ்வாதார திட்டம் தொடங்கப்டும்.
* வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.
* தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக்க முயற்சி எடுக்கப்படும்.
* சென்னை நந்தனத்தில் டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம் அமைக்கப்படும். ஆதிதிராவிடர்களை தொழில் முனைவோராக்க மாற்ற திட்டம் அமைக்கப்படும்.
* சமூக நீதித் துறையின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
* தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த சரிநிகர் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
* ஆதிதிராவிடர் விளைவிக்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும்.
* ஆதிதிராவிடர் பெண்களுக்கு சோலார் அடுப்பு வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்க வேளாண் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
* வேலைவாய்ப்பை உருவாக்க திறன் பயிற்சி, தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர்களுக்கு தொழில் முனைவு வாய்ப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
* தூய்மைப் பணியாளர் நலக்குழு உருவாக்கப்படும்.
* ஆதிதிராவிடர்களுக்கு எளிதாக கடன் வழங்க வசதி செய்து தரப்படும்.
* பழங்குடியின மொழி குறித்த வகுப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு கலைத் திறன் பயிற்சியை ஊக்குவிக்க சென்னையில் கலைத்திறன் பட்டறை பயிற்சி அமைக்கப்படும்.
* ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி திட்டம் வழங்கப்படும்.
* ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கும் புரிந்துணர்வு திட்டம் வழங்கப்படும்.
* சமூக நீதி விடுதிகளில் கொசு வலை அமைக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் 18 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முகஅகியத்துவம் அளித்தார்.
* 10,000 மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்படும்.
* MBC Welfare Board அமைக்கப்படும்.
* மாணவர்களின் விடுதிக் கட்டணம் குறைக்கப்படும்.
* சூப்பர் கேம்பஸ் திட்டம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.