சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

சோனியா காந்தி - பிரதமர் மோடி
சோனியா காந்தி - பிரதமர் மோடி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ ஒற்றுமை நடைபயணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி இரண்டு நாள் பயணமாக ஜெய்பூர் சென்றுள்ளார்.

தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அவருக்கு, அங்கேயே பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடி சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:சோனியா காந்தி நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி  குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும், சோனியா காந்திக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com