செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய எச்சரிக்கை நடவடிக்கையை கொண்டு வந்த ஸ்பெயின்!

Mobile phone usage
Mobile phone usage
Published on

செல்போன் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க ஸ்பெயின் அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா காலத்திற்கு பிறகு ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு உலகெங்கிலும் மிகவும் அதிகமானது. பள்ளிப் போகும் மாணவர்கள் முதல் வேலைக்குப் போகும் இளைஞர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

மேலும் வீட்டில் இருக்கும் முதியவர்கள் கூட ஸ்மார்ட் போன் வாங்கி அப்டேட் ஆனார்கள். இதனால் பட்டன் போன்களின் பயன்பாடு மிகவும் குறைவானது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்யத் தொடங்கினர். இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமை வாங்கிவிட்டனர் என்று கூறும் அளவிற்கு பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளில் 16 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.  

இதையும் படியுங்கள்:
கிணற்றில் விழுந்தவரை பேய் என்று நினைத்த மக்கள்… அப்றம் என்னாச்சு தெரியுமா?
Mobile phone usage

அந்தவகையில் தற்போது ஸ்பெயினிலும் ஒரு புது விதிமுறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது செல்போன் பயன்பாட்டை  பொது சுகாதார தொற்றுநோய் என குறிப்பிட்டு மொபைல் போன்களில் புதிய எச்சரிக்கை வாசகங்களை சேர்க்க உள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. அதாவது புகையிலை  மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதியிருக்கும் வசனங்கள் போல் செல்போன்களிலும் வசனங்கள் சேர்க்கப்படவுள்ளது.

இதனையடுத்து 50 நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஸ்பெயின் அரசிடம் சமர்பிக்க உள்ளதாம். அதில் செல்போன் பயன்படுத்துவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவை இடம்பெறுமாம்.

இதையும் படியுங்கள்:
விவாகரத்து வதந்தி - செல்ஃபி மூலம் பதில் தந்த ஐஸ்வர்யா ராய்
Mobile phone usage

3 வயது குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்கவே கூடாது. 13 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.  மேலும் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் அதிகம் விளையாட வேண்டும் என்று ஸ்பெயின் அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதன்மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் எனவும் கூறியுள்ளது.

செல்போன் பயன்பாட்டை குறைத்து மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்பெயின் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com