சிறப்பு வாக்காளர் திருத்தம்: பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென்றால் என்ன செய்யவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்
Published on

இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்கட்டமாக பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், வாக்காளர் திருத்தப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டியது தேர்தல் ஆணையம்.

அதன் தொடர்ச்சியாக, இந்த பணி 2-ம் கட்டமாக அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதனை தொடர்ந்து இந்த பணிகள் கடந்த 4-ம்தேதி முதல் தொடங்கியது. இதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியை 4 கட்டமாக பிரித்து கொள்ளலாம். முதல் கட்டமாக, கடந்த 4-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுப்பார்கள்.

2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். 3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பெறப்படும். 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்படும்.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா..? சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர் பட்டியல்

1950-ம் ஆண்டுக்கு பிறகு 10 முறை வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2005-ம் ஆண்டுக்கு பின்னர், அதாவது 20 ஆண்டுகளுக்குபின் தற்போது சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளபடுகிறது.

இறந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூர் சென்ற வாக்காளர்கள், வாக்காளரின் பெயர் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளர்கள் இது போன்ற வாக்காளர்களை கண்டறிவதே இதன் முக்கிய பணியாகும்.

வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை மக்கள் பெற்றுக்கொண்டு அதனை நிரப்பி திருப்பித்தர வேண்டும். ஒருவேளை தராவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்படும். அதேபோல முகவரி மாற்றம் செய்து இருந்தாலும் அவர்கள் பெயரும் பட்டியலில் இடம் பெறாது. அவர்கள் அதற்கான காலத்தில் மனு கொடுத்து பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். தகுதியான யார் பெயரும் விடுபடாது.

ஒருவேளை, 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி பெயர்கள் அந்தப் பட்டியலில் இருந்தால், அதைத் தெரிவித்து, உரிய ஆவணங்களைக் காட்டி டிசம்பர் 9-ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். அல்லது அவர்கள் பெயர் வேறு எந்த தொகுதியில் அதற்கு முன்பு இருந்தது என்பதை ஆய்வு செய்து, அதனுடன் ஒப்பிட்டு இணைக்கப்படும்.

ஒருவேளை அவர்கள் பெயர் இல்லாவிட்டால் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, அவர்கள் வசித்த தொகுதி, அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். எதிலுமே அவர்கள் பெயர் இல்லாவிட்டால் வரைவு பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெறாது. மீண்டும் அவர்கள் ஆவணங்களை கொடுத்து மனு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிறப்பு வாக்காளர் திருத்தம்: தமிழக மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்..!
வாக்காளர் பட்டியல்

அதேபோல் முகவரி மாற்றம் செய்தவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், தங்களுக்குரிய ஆவணங்களை டிசம்பர் 7-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதிக்குள் சமர்ப்பித்து, பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இடம்பெறச் செய்யலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com