

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவுகளில் (CAPF) காலியாக உள்ள 1,871 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள உதவி காவல் ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் Staff Selection Commission (SSC)அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் Sub-Inspector பணிக்கு மொத்தம் 1,871 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு SSC தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 1871 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1871
நிறுவனம்: Staff Selection Commission (SSC)
தேர்வு பெயர்: Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி வகை: நிரந்தர வேலை
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026 இரவு 11:00 மணி
விண்ணப்பத்தை திருத்தங்கள் செய்ய (Correction Window): அக்டோபர் 8 முதல் 10, 2026 வரை (இரவு 11:00 மணி வரை)
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 01.10.2026 (இரவு 11:00 மணி வரை)
காலியிட விவரங்கள்
டெல்லி காவல்துறை (SI - Executive): 317 இடங்கள் (ஆண்கள் - 205, பெண்கள் - 112)
மத்திய ஆயுதப் படைகள் (SI - GD): 1,320 இடங்கள்
சிஐஎஸ்எஃப் (SI - Fire): 234 இடங்கள் (ஆண்களுக்கு மட்டும்)
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை (Pay Level-6)
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Bachelor's Degree) முடித்திருக்க வேண்டும். சிஐஎஸ்எஃப் தீயணைப்புப் பிரிவு SI பதவிக்கு அறிவியல் பிரிவு (Physics, Chemistry, Maths) அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ அவசியம்.
வயது வரம்பு:
01.08.2026 அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு பிரிவு பணியிடங்களுக்கு 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை:
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), ஆங்கில மொழி அறிவு தேர்வு (English language & Comprehension) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதற்கட்ட கணினி வழித் தேர்வு (Paper-1), உடல் தகுதி மற்றும் திறன் தேர்வு (PST/PET),
இரண்டாம் கட்டத் தேர்வு (Paper-2) மற்றும் மருத்துவப் பரிசோதனை.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்வு மையம் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/login என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
SSC அதிகாரப்பூர்வ Websiteக்கு சென்று முதலில் One-Time Registration (OTR) செய்யுங்கள்.
Login செய்து Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026 என்பதை தேர்வு செய்து, தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் Exam Centre விவரங்களை நிரப்ப வேண்டும்.
தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்ய வேண்டும்.
இறுதியாக Application PDF / Print Copy-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.