ஒரு போன் கால் போதும்.. வீட்டிற்கே வரும் எஸ்பிஐ வங்கி! புதிய வசதி இதோ..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீடு தேடிவரும் இலவச வங்கி சேவையை (DSB)அறிமுகப்படுத்தியுள்ளது.
SBI
SBI
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகயை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அற்புதமான வசதியை ஏற்படுத்தியுள்ளது. SBI அலையன்ஸ் உடன் இணைந்து, SBI வங்கிச் சேவைகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துள்ளது. அதாவது வீடு தேடிவரும் இலவச வங்கி சேவையை (DSB)அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே எளிதாக தங்கள் நிதிப் பரிவர்த்தனைகளை முடிக்க முடியும்.

இந்த வசதியின் மூலம் இனிமேல் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது இணையதளத்தின் மூலமே உங்கள் வேலையை எளிதில் முடித்துக் கொள்ளலாம். வங்கித் துறையின் மிகவும் பாதுகாப்பான இந்த மாற்றங்கள் சாமானிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதன் மூலம் நீங்கள் பல வகையான சேவைகளைப் பெறலாம். அதாவது பணம் பெறுதல், பணம் வழங்குதல், காசோலை பெறுதல், ஆயுள் சான்றிதழ் பெறுதல், மற்றும் கேஒய்சி (KYC) ஆவணம் பெறுதல் போன்ற சேவைகளை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
நவம்பர் 1 முதல் எஸ்பிஐ கார்டுக்கான கட்டணங்களில் புதிய விதிமுறை...!
SBI

இது குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயனளிக்கிறது. 2026-ம் ஆண்டு முதல், தங்களது சொந்தக் கிளையிலிருந்து 5 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும், கேஒய்சி (KYC) நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவைகள் கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் அனைத்து சேவைகளையும் இவர்கள் எந்தக் கூடுதல் கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும் என்று SBI வங்கி அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு (60+ வயதுடையவர்கள்) சேவைகள் பொதுவாக இலவசம், இருப்பினும் சில குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் இருக்கலாம் (எ.கா., மாதத்திற்கு 2 முறை வரை இலவசமாகப் பணம் எடுக்கலாம்).

அதேபோல் ஒரு நாளைக்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹20,000 வரை பணம் எடுக்கவும் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்படும்.

மற்ற வாடிக்கையாளர்களுக்கு நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹60+ஜிஎஸ்டி மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கு ₹100+ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளரின் அடையாளத்தைச் சரிபார்க்கும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் சேவைகள் வழங்கப்படுகின்றன, மேலும் பரிவர்த்தனை எச்சரிக்கைகள் குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படுகின்றன.

எஸ்பிஐ மோசடிக்கு இடமில்லாமல் மேம்பட்ட பாதுகாப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பொதுத்துறை வங்கி என்பதால், உங்கள் தனிப்பட்ட தகவல்களும் பணமும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

இந்தச் சேவைகளைச் செயல்படுத்துவது மிகவும் எளிது. மேலும் தகவல்களுக்கும் பதிவு செய்வதற்கும், வாடிக்கையாளர்கள் sbi.bank.in/dsb அல்லது PSB அலையன்ஸ் டோர்ஸ்டெப் பேங்கிங் (PSB Alliance Doorstep Banking) தளத்தைப் பார்வையிடலாம். PSB (Alliance Doorstep Banking App) செயலி, இணையதளம் அல்லது 1800 1111 03 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலமும் நீங்கள் சேவைகளை முன்பதிவு செய்யலாம். நீங்கள் விரும்பும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து, வீட்டிலிருந்தே வங்கிச் சேவைகளைப் பெறலாம். வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோரிக்கைகளைச் செய்யலாம், சேவைகள் பொதுவாக வேலை நாட்களில் மட்டுமே வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! மே 1 முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்..!!
SBI

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வங்கிக்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை, வங்கியே உங்களை தேடி உங்கள் வீட்டிற்கே வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com