

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான பொருட்களை பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகின்றனர். மொபைல் போன்கள் முதல் மளிகை சாமான்கள் வரி ஆன்லைனில் ஆர்டர் செய்தது வரும் பொதுமக்கள், மருந்துப் பொருட்களையும் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகின்றனர்.
முறையான பராமரிப்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஆன்லைனில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மருந்து விற்பனையாளர் சங்கம் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.
இந்நிலையில் வருகின்ற மே 20-ம் தேதி நாடு முழுவதும் அனைத்து மருந்தகங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வருகின்ற 20-ம் தேதி கிட்டத்தட்ட நாடு முழுவதும் 12 லட்சம் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணற்ற நோயாளிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் போது பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்ற நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே இயங்கி வந்தன. மேலும் மருந்துப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து விநியோகம் செய்யும் முறைக்கு மத்திய அரசு அனுமதியும் அளித்திருந்தது. இந்நிலையில் இந்த நடைமுறை இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மருந்து விற்பனையாளர் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்தது சரியாக இருந்தாலும், தற்போது ஊரடங்கு முடிந்த பிறகும் அதே நிலை தொடர்வது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தாலாக அமையும் என மருந்து விற்பனை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்கள் சரியான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் இன்றி நோயாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நோயாளியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மின் மருந்தக செயல்பாடு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகின்ற மே 20-ம் தேதி நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு ஈடுபடத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக மருந்தகங்களின் விற்பனை பாதிக்கப்பட்டதோடு, நோயாளிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதால், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.