#JUST IN: தாறுமாறாக எகிறும் தங்கத்தின் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Gold Price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் நேற்று (மே 13) நள்ளிரவு முதல் தங்கத்தின் மீதான இறக்குமதி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயரும் என்றே கணிக்கப்பட்டது.

அதற்கேற்பவே நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-க்கும், ஒரு சவரன் ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.330-க்கு விற்பனையானது.

ஆனால் நேற்று மாலையே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்து சற்று நிம்மதி அளித்தது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.15,000-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.3,200 குறைந்து ரூ.1,20,000-க்கும் விற்பனையானது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.320-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 14) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,20,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.315-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.3,15,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று காலை தங்கத்தின் விலை உயர்ந்து, மாலையில் குறைந்தாலும் ரூ.5,360 வரை உயர்ந்தது அதிர்ச்சியளிக்கும் விதமாகவே உள்ளது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரிசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நேரம் குறையுது.. கட்டுப்பாடு ஏறுது.! இனி ஆதார் கார்டு இருந்தா தான் 'சரக்கு'.!
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

மே 13: 1 கிராம் - ரூ.15,000 1 சவரன் ரூ.1,20,200

மே 12: 1 கிராம் - ரூ.14,330 1 சவரன் ரூ.1,14,640

மே 11: 1 கிராம் - ரூ.14,100 1 சவரன் ரூ.1,12,800

மே 10: 1 கிராம் - ரூ.14,150 1 சவரன் ரூ.1,13,200

மே 9: 1 கிராம் - ரூ.14,150 1 சவரன் ரூ.1,13,200

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
Gold Price
logo
Kalki Online
kalkionline.com