ஆன்லைன் தேர்வில் உதவி கேட்ட மாணவி.. ChatGPT கொடுத்த 'ஷாக்கிங்' பதில்..!!

Student Asks AI For Help
Student Asks AI For HelpAI image
Updated on

ஆன்லைன் தேர்வின் போது சாட்ஜிபிடி உதவியுடன் பிட் அடிக்க முயன்ற கல்லூரி மாணவிக்கு, அந்த ஏஐ செயலி கல்வி நேர்மையை கற்றுக் கொடுத்து விடை தர மறுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு. இந்த தொழில்நுட்பத்திற்கு வருங்காலத்தில் கிராக்கி அதிகம் என்பதால் பிளஸ் 2 முடித்தவர்கள் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை எடுத்து படிக்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் உருவாகியுள்ளது. இதன் மூலம் நாம் வைக்கும் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் விடை கொடுக்கும் வகையில் உள்ள ஒரு கருவியாகும். இந்த சாட்ஜிபிடியை வைத்து மாணவர்கள் தங்களது வீட்டுப் பாடங்களுக்கும், புராஜெக்டுகளுக்கும், கடிதங்களை எழுதுவதற்கும், பள்ளி, கல்லூரிகளுக்கான கட்டுரைகள், கதைகள், அடிப்படையில் இசையை அமைப்பதற்கும் இதனைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புஷ்பாஞ்சலி சிங் என்ற மாணவி, தனக்கு ஆன்லைன் தேர்வு நடந்து கொண்டிருந்த போது, அதற்குரிய பதில்களைத் தரும்படி சாட்ஜிபிடியிடம் நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு ChatGPT "நேரடியாக நடைபெறும் தேர்வில் பதில் சொல்ல முடியாது; கல்வி நேர்மையை காக்க வேண்டும்" என்று தெரிவித்தது.

அதாவது ‘சாட்ஜிபிடி தரப்பில் இருந்து, நீங்கள் குவிஸ் போட்டி அல்லது தேர்வின் நடுவில் என்னிடம் இந்த விவரங்களை கேட்கிறீர்கள் போன்று தெரிகிறது. லைவ்வில் தேர்வு நடக்கும்போது, இதுபோன்ற கேள்விக்கு என்னால் பதில் தர முடியாது. ஆனால், பொதுவான விசயங்களை தர முடியும் என பதிலாக தரப்பட்டு உள்ளது. கல்வி தொடர்பான விசயங்களில் நேர்மையற்ற விசயங்களை தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான பொதுவான சந்தேகங்களுக்கு நான் விளக்கம் அளிக்க முடியும்’ என்பதை சுட்டி காட்டி அந்த பெண்ணின் வேண்டுகோளை சாட்ஜிபிடி கறாராக நிராகரித்து உள்ளது.

ஏஐ செயலி தனக்கு விடை தர மறுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அந்த உரையாடலை அப்படியே ஸ்கிரீன்ஷாட் (screenshot) எடுத்து, அதன் கீழே ‘தேர்வு நேரத்தில் மாணவி ஒருவர் ChatGPT-இடம் உதவி கோரியபோது, அவருக்கு மறுப்பு கிடைத்தது’ என்ற வாசகத்தை குறிப்பிடப்பட்டு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். மேலும் ‘அடடா... உங்கள் அடுத்த நேர்காணலின்போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று தனது நகைச்சுவையான கருத்தையும் அதனுடன் இணைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, "ஏஐக்கும் தேர்வு ஒழுங்குமுறை உண்டா?" என்று நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது. பல பயனர்கள், வைரலான அந்த ஸ்கிரீன்ஷாட்டால் ஈர்க்கப்பட்டு, தங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் நகைச்சுவைகளையும் பகிர்ந்துகொண்டனர்.

‘ChatGPT ரொம்பவே திமிர்பிடித்ததாக மாறி வருகிறது’ என்று ஒரு பயனர் வேடிக்கையாகக் குறிப்பிட்ட நிலையில், இதனைப் பார்த்த மற்றொரு நெட்டிசன் எளிதான தீர்வு ஒன்றை முன்மொழிந்தார். ‘அடுத்த முறை கேட்கும்போது, தேர்வு நடக்கிறது என குறிப்பிடாமல் கேட்டு பாருங்கள்’ என ஐடியா கொடுத்துள்ளார்.

தேர்வுக்கான வினாத்தாளே ChatGPT-யைக் கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அந்தச் சாட்போட்டிற்கு (chatbot) அது தெரிந்திருக்கலாம் என்றும் ஒரு பயனர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இன்னொருவர், சாட்ஜிபிடியை நம்பி நான் நேர்காணலுக்கு செல்கிறேன் என்றால், நான் அந்த வேலைக்கு தகுதியானவன் கிடையாது எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால், பெரும்பான்மையான மக்கள் சாட்ஜிபிடியின் இந்த நேர்மையான அணுகுமுறையைப் பாராட்டி வருகின்றனர்.

தேர்வில் காப்பியடிக்க முயன்ற மாணவிக்கு ஏஐ செயலியே ஆப்பு வைத்த சம்பவம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் மட்டுமல்ல, வீடுகளிலும் இதை செய்யாதீங்க! உங்களை அறியாமலேயே உடலுக்குள் செல்லும் நச்சு!
Student Asks AI For Help
logo
Kalki Online
kalkionline.com