

உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of India) காலியாக உள்ள 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் (Junior Court Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் குரூப் - பி பிரிவில் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேவைக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...
வேலை பிரிவு: மத்திய அரசு வேலை (Central Govt Jobs)
துறைகள்: இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)
காலியிடங்கள்: 250
பணி: இளநிலை நீதிமன்ற உதவியாளர் (Junior Court Assistant)
பணியிடம்: இந்தியா
கல்வித் தகுதி: Any Degree
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 07.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2026 (இரவு 11:55 மணி வரை)
தேர்வு தேதி: 20.11.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.sci.gov.in/recruitments/
சம்பளம் : மாதம் ரூ.35,400 (Level 6) + படிகள்
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பு (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 35 வார்த்தைகள் (35 W.P.M.) தட்டச்சு செய்யும் திறன். கணினியை இயக்குதல் மற்றும் அதன் அடிப்படை செயல்பாடுகள் குறித்த நன்கு அறிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு (செப்டம்பர் 1, 2026 நிலவரப்படி) மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வும் அளிக்கப்படும்.
அதன்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செயல்முறை :
இப்பணியிடங்களை நிரப்ப நான்கு கட்ட தேர்வு முறை பின்பற்றப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு (Written Exam (Objective Type Test)
கணினியில் தட்டச்சு வேகப் பரிசோதனை (Typing Speed Test on Computer)
எழுத்துத் தேர்வு (Written Test (Descriptive)
நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750
பிற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1,500
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே.
விண்ணபிக்கும் முறை :
இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் வரும் 7-ம்தேதி முதல் 28-ம்தேதிக்குள் www.sci.gov.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.