SBI-ல் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளம்...யார் யார் விண்ணப்பிக்கலாம்?

கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் சென்று கொண்டு இருக்கும் நிலையில், தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
Job vaccancy in SBI
Job vaccancy in SBI
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (State Bank of India -SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி வருகிறது. கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் சென்று கொண்டு இருக்கும் நிலையில், தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. மொத்தம் 207 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

SBI வேலைவாய்ப்பு

மொத்த காலிப் பணியிடங்கள்: 207

பணி விவரம்: ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer). இது ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணியாகும்.

காலிப் பணியிடங்கள் விவரம்:

மண்டல தலைவர் (ரீடெயில்) - 01

பிராந்திய தலைவர் - 05

ரிலேஷன்ஷிப் மேனேஜர் டீம் லீடு - 24

இன்வெஸ்ட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் - 09

இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர் - 04

விபி வெல்த் - 91

ஏவிபி வெல்த - 73

கல்வித் தகுதி:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள பணிக்குப் பணி கல்வித் தகுதி மாறுபடுகிறது. ஆனால், அதில் குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக விண்ணப்பத்தாரர் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். அதாவது ஏதாவது ஒரு பட்டம், முதுகலை பட்டம்/ பிஜி டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு Zonal Head (மண்டல தலைவர்) பணிக்கு அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் இருந்து பட்டம் முடித்து இருக்க வேண்டும்.

எம்பிஏ (வங்கி, நிதி, மார்க்கெட்டிங்) 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம் வங்கி துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றியிருப்பது அவசியம்.

Bank job
SBI வேலைவாய்ப்பு

ஏவிபி வெல்த் பணிக்கு குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், வங்கி உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்ட முதுகலை பட்டம் முடித்து இருந்தால் கூடுதல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்படும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பத்தாரருக்கு குறைந்தபட்சம் 23, அதிகபட்சம் 50 வயது இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.

சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.97 லட்சம் (மாதம் ரூ.8.08 லட்சம்); குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.27 லட்சம் (மாதம் ரூ.2.25 லட்சம்)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
IOB வங்கியில் 250 பணியிடங்கள்: சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலை! விண்ணப்பிப்பது எப்படி?
Job vaccancy in SBI

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய ஆன்லைன் முகவரி: recruitment.sbi.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 25, 2026.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு முறை: தகுதியான விண்னப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
SBI வங்கியில் 9,124 காலிப்பணியிடங்கள்! தமிழ்நாட்டிற்கு 1,410 இடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
Job vaccancy in SBI

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தேர்வு அறிவிப்பை படிக்க: https://recruitment.sbi.bank.in/crpd-sco-2026-27-23/apply என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com