பட்டியலில் பெயர் இல்லை என்றாலே குடியுரிமை போய்விடுமா? - உண்மையை உடைத்த உச்ச நீதிமன்றம்.!

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் இதோ.
வாக்காளர் பட்டியல்
Supreme Court
Updated on

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை (SIR) மேற்கொண்டது. இதன்படி தகுதியற்ற வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. தமிழகத்தில் மட்டும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இருப்பினும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்பட்டால், அது அவரின் குடியுரிமையை எந்த விதித்திலும் பாதிக்காது என உச்ச நீதிமன்றம் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி வாக்காளர் உரிமைக்கும், குடியுரிமைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்:
காலையிலேயே ஷாக்.. தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.!
வாக்காளர் பட்டியல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிப்பவர்கள் படிவம் 6 உடன், தங்களது பெற்றோர்களின் எஸ்ஐஆர் விவரங்களையும் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. பெற்றோர்களின் எஸ்ஐஆர் விவரங்களை அளித்தால் மட்டுமே விண்ணப்பம் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் குடியுரிமை தொடர்பான முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்தியக் குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறது. குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

குடியுரிமை vs வாக்குரிமை:

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி குடியுரிமை என்பது சட்டப்பூர்வமானது. வாக்காளர் உரிமை என்பது பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வரும் சட்டப்பூர்வ உரிமை. தேர்தல்களில் வாக்கு செலுத்தும் தகுதியை மட்டுமே வாக்காளர் பட்டியல் முடிவு செய்யும். ஆனால் இது பொதுமக்களின் இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் முடிவு செய்யாது.

சில நேரங்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமை, முகவரி மாற்றம் மற்றும் ஆய்வின்போது ஏற்படும் தவறுகள் உள்ளிட்டவை காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை பொதுமக்கள் யாரும் குடியுரிமை பறிப்பாக கருத வேண்டாம்.

இந்திய குடியுரிமைச் சட்டம், 1955 இன் படி, ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமெனில் சில நடைமுறைகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் பெயரை நீக்குவதால் மட்டும் அவர் அந்நியராகி விடமாட்டார்.

Voters List
SIR
இதையும் படியுங்கள்:
மத்திய கிழக்கில் ஈரான் தாக்குதல்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? சிலிண்டருக்கு சிக்கல் வருமா.?
வாக்காளர் பட்டியல்

ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டால், நீங்கள் பதற்றமடையாமல், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள்.

1. ​சரிபார்த்தல்:

முதலில் Voter Services Portal இணையதளத்தில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

2. ​அதிகாரியிடம் மேல் முறையீடு:

தேர்தல் பதிவு அதிகாரி (Electoral Registration Officer) அலுவலகத்தை நேரில் அணுகி, உங்கள் பெயர் நீக்கப்பட்டதற்கான உரிய காரணத்தைக் கேட்டு, அதனைச் சரிசெய்ய கோரலாம்.

3. மீண்டும் விண்ணப்பித்தல்:

உங்களுடைய பெயர் தவறுதலாக நீக்கப்பட்டால், படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து, பெற்றோர்களின் எஸ்ஐஆர் விவரங்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் போது முகவரி மற்றும் அடையாளத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com